இடைகால இந்தியா

Deal Score0

தென்னிந்திய அரசுகள்:

  • சங்ககாலத்திற்குப் பிறகு கி.பி. 300 – 600 வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சிசெய்தனர். பின்னர் களப்பிரர்களை வீழ்த்தி பல்லவ ஆட்சியை சிம்மவிஷ்ணு தொண்டை மண்டலத்தில் தொடங்கி வைத்தார். பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம் ஆகும்.
  • பின்னர் சோழப்பகுதிகள் சிலவற்றையும், ஆந்திர, காவிரி பகுதிகளையும் கைப்பற்றி விரிந்ததொரு பேரரசை நிறுவினார். அதனால் இவர் அவணிசிம்மன் (உலகின் சிம்மன்) என அழைக்கப்பட்டார்.

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி.600 – 630):

  • சிம்மவிஷ்ணுவின் மகன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவார்.
  • இரண்டாம் புலிகேசியுடன் போரிட்டு இவர் தோல்வியடைந்தார்.
  • முதலில் சமண மதத்தை தழுவி பின்னர் அப்பரால் சைவ சமயத்திற்கு மாறினார். கட்டிடக்கலை, ஓவியக்கலை, இசைக்கலையில் ஈடுபாடு கொண்டு பல சிறப்புகளை செய்தார்.
Click Here To Get More Details