அளவீட்டியல்

Deal Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அளவீட்டியல் 

 • அளவீட்டியல்
 • அலகு
 • SI அலகு முறை
 • ஒப்படர்த்தி
 • வேலையின் அலகு
 • ஆற்றலின் அலகு
 • திறனின் அலகு
 • அளவிடும் கருவிகள்
 • இயக்க ஆற்றல்
 • வெப்ப ஏற்புத்திறன்
 • உருகுதல்
 • அளவிடும் கருவிகள்
 • கெல்வின் வெப்பநிலை அளவீடு
 • வெர்னியர் அளவி
 • வெர்னியரின் மீச்சிற்றளவை
 •  எதிர்பிழை
 • உருளையின் நீளத்தை அளவிடுதல்
 • திருகு அளவியின் சுழிப்பிழை
 • இயற்பியல் தராசு
 • அடிப்படையான இயற்பியல் மாறிலிகள்
 • மதிப்புகளும் அலகுகளும்

 

அளவீட்டியல்

 • பொருள்களின் பண்புகளை அறிந்து கொள்ளும் அறிவியலின் பிரிவு என இயற்பியலை வரையறை செய்யலாம் பொருள்களின் பண்புகளைப் பற்றி புரிந்து கொள்ள நீளம், நிறை, காலம் போன்ற இயற்பியல் அளவுகளை அளவீடு செய்தல் இன்றியமையாதது ஆகும்.
 • இயற்பியல் அளவீடு செய்வது இயற்பியலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் ஆகும்.

அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள்

 • இயற்பியல் அளவுகளை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்படுத்தலாம் மற்ற எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிடப்பட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும் நீளம், நிறை, காலம், வெப்பநிலை போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். அடிப்படை அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகளை வழி அளவுகள் எனலாம். பரப்பு, கன அளவு, அடர்த்தி போன்றவை வழி அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

SI அலகு முறை (System International de Units)

 • முற்காலத்தில் இயற்பியல் அளவுகளை அளவிட பல அலகிடும் முறைகள் பின்பற்றப்பட்டன
 • பிரிட்டிஷ் முறையான அடி – பவுண்ட் – நொடி அல்லது fps முறை, காஸியன் (Gaussian) முறையான சென்டிமீட்டர் – கிராம் – நொடி அல்லது cgs முறை, மீட்டர் – கிலோகிராம் – நொடி அல்லது mks முறை ஆகிய மூன்று முறைகள் பின்பற்றப்பட்டன. ஒரு சீரான ஒழுங்குமுறையைப் பின்பற்றுவதற்காக 1960 ம் ஆண்டில் நடைபெற்ற எடைகள் மற்றும் அளவீடுகள் மாநாட்டில் SI அலகு முறை உருவாக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 • பல அலகு முறைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க உலகில் உள்ள எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பன்னாட்டு அலகுமுறை 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதனை SI அலகு முறை என்பர்
 • இம்முறையானது சில மாற்றங்களுடன் கூடிய mks முறையாகும் அதாவது நியாயமான mksA (Rationalised metre kilogram second ampere – RmksA) என்பது SI முறையாகும் இயற்பியலில் உள்ள அனைத்து இயற்பியல் அளவுகளுக்கும் அலகுகளைப் பெற இந்த நியாயமான தன்மை அவசியமாகிறது.
Click Here to Download