Make in India

இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Make in India ' program was inaugurated by Narendra Modi

 

  • அரசுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் இடையேயான தொடர்புகளை எளிமைப்படுத்தும் நோக்கத்துடன் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்ததார்.

 

  • டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும், உலக அளவில் இந்தியாவை மாபெரும் உற்பத்தி மையமாக நிலைநாட்டவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 

  • தொழில் முதலீடுகள் குறித்து மத்திய, மாநில அரசுகளைத் தனியார் நிறுவனங்கள் எளிமையாக அணுகுவதற்கு இந்தத் திட்டம் பெரிதும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

  • அரசு விதிகள் தொடர்பாக தொழில் நிறுவனங்கள் எழுப்பும் சந்தேகங்களை 3 நாள்களுக்குள் தெளிவுபடுத்தும் நோக்கத்தோடு, புதிய இணையதள முகவரி ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

 

  • தற்போது நடைமுறையில் உள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளை கண்காணித்து அவற்றை எளிமைப்படுத்தி, வர்த்தக நிறுவன பரிவர்த்தனைகளை விரைவுபடுத்துவதற்கு இந்த இணையதளம் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

  • இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “ உலகநாடுகளின் முதலீட்டை ஈர்ப்பதற்கும், நமது நாட்டில் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கும் இந்தத் திட்டம் பயன்படும்“ என்று தெரிவித்தார்.

 

  • மேலும், தொழில் வளர்ச்சியைப் பெருக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படவேண்டும் என்றும் மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றும் மோடி கூறினர்ர்.

 

  • 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக, அமெரிக்கா செல்வதற்கு முன்பாக ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
LATESTS GOVERNMENT JOBS