Mahatma Gandhi National Rural Employment Guarantee

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்

  • ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் பத்தாண்டு காலத்தில் அதிகம் பேசப்பட்ட, முக்கியத்துவம் வழங்கப்பட்ட, கிராம மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற திட்டம் எந்த அளவு முக்கியத் திட்டமாகப் பேசப்பட்டதோ, அதே திட்டம் கடந்த ஓராண்டில் அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாய் பேசப்படுகிற திட்டம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்.

 

mahatma-490370

 

 

 

  • `தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்’ 2005 ஆகஸ்ட் 23-இல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு. 2005 செப்டம்பர் 7 – ஆம் தேதி மத்திய அரசின் கெஸட்டில் அறிவிக்கப்பட்டது. இச் சட்டம் 2006 பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக நாட்டிலுள்ள 200 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களிலும், பின் 2007-2008 நிதியாண்டில் இரண்டாம் கட்டமாக கூடுதலாக 130 மாவட்டங்களிலும், அடுத்து 1-4-2008 முதல் அனைத்து கிராமப்புற மாவட்டங்களிலும் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. 2009-ஆம் ஆண்டு காந்திஜி பிறந்தநாளின் போது, இது ஒரு திருத்தத்தின் (amendment) மூலம் `மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்’ என்று பெயர் மாற்றப்பட்டது.

 

  • சுதந்திர இந்தியாவில் இந்தத் திட்டம் உருவாக்கியது போல் எந்தத் திட்டமும் லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கவில்லை. `ஊரக வளர்ச்சிக்கு இத்திட்டம் ஓர் அற்புதமான உதாரணம் (A stellar example of rural development)’ என உலக வங்கி தனது 2014க்கான உலக மேம்பாட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதை ஒரு பொருளாதாரத் திட்டம் என்பதைவிட சமூக நலம் சார்ந்த திட்டம் என்றே கூறலாம்.

 

  • இத்திட்டத்தின் முழுப்பயனை அடித்தட்டு கிராம மக்கள் அனுபவித்தார்களா என்பது கேள்விக்குறி. முற்றிலும் இல்லை என்றும் கூறமுடியாது. எந்த அரசு திட்டத்திலும் ஆங்காங்கே குளறுபடிகள் இருக்கும். இது நாடு தழுவிய மகாப் பெரிய திட்டமாதலால் அதிகக் குறைபாடுகள் இருந்தன என்பது மறுக்க முடியாத உண்மை.

 

  • இந்தத் திட்டத்தினால் எந்தவிதப் பெரிய சொத்துக்களையும் கிராமப்புறத்தில் ஏற்படுத்தியிருக்காவிட்டாலும், அடிப்படை கட்டமைப்புகளான அங்கன்வாடி மையங்கள் அமைத்தல், கழிப்பறைகள் கட்டுதல், இடுகாடுகள் அமைத்தல்,குழந்தைகளுக்கான விளையாட்டுத்திடல்கள் அமைத்தல், வெள்ளத் தடுப்பு, கால்வாய்களில் தூர்வாருதல் போன்ற பணிகள் முழுமையாக நடந்தேறின என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆங்காங்கே செயற்கை நீர் சேமிப்புக் குட்டைகள் அமைத்ததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறையவில்லை.

 

  • இந்தத் திட்டம் அன்றாடக் கூலிகளுக்கு வருடத்தில் 100 நாட்கள் உறுதியான வேலையை அளித்தது. தற்போது இத்திட்டத்தில் ஒரு நாளுக்கான சம்பளம் `133 லிருந்து 214 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. முக்கியமாக இந்தத் திட்டத்தில், 33% வேலைவாய்ப்பை பெண்களுக்கு அளிக்க முன்னுரிமை தரப்படுகிறது. ஆண்கள் இல்லாத வீட்டில் வாழும் பெண்களுக்கு வருமானம் கிடைக்கும்படியாக இத்திட்டம் வேலைவாய்ப்பை அளிக்கிறது.

 

  • இந்த வேலைவாய்ப்புகளால் கிடைத்த தொகையினால் கிராமப்புறங்களில் சிறு சிறு முதலீடுகளும் செய்யப்பட்டன. இன்னும் சொல்லப்போனால், அனைத்து ஏழைக்குடும்பங்களுக்கு இரண்டு வேளை உணவு உறுதி செய்யப்பட்டது. மேல்தட்டு மக்களில் பெரும்பாலோர் நகர வாழ்க்கையை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதால், அடித்தட்டு மக்கள் அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்தது.

 

  • அதே சமயம் இந்தத் திட்டத்தை வெறும் சாக்கடையைத் தோண்டும் திட்டம் என்று கேலி செய்வோரும் உண்டு. இந்தத் திட்டம் சுதந்திர இந்தியாவில் நிறுவப்பட்ட ஒரு மாபெரும் தோல்வியின் சின்னம் என்று கூறுவோரும் உண்டு. வயிற்றுப்பசிக்கு அவ்வப்போது சோறு போடுவதை விட, நிரந்தரமான வேலை ஒருவனுக்கு உருவாக்கப்பட வேண்டும். அந்தத் தளத்தில் இந்தத் திட்டம் ஒரு தோல்வியே எனக் கூறுவோரும் உண்டு. இந்தத் திட்டம் கிராமப்புற விவசாயத்தில் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. விவசாயக் கூலி உயர்ந்து விட்டதால் பல நிலச் சுவான்தார்கள் விவசாயத்தையே விட்டுவிட்டனர். இதை அரசாங்கம் சரிசெய்திருக்கலாம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் தனித்தனியே கவனம் செலுத்த வேண்டும். 100 நாட்களை எப்படிப் பிரிப்பது. பரந்த இந்தியக் கண்டத்தில் ஒரே காலகட்டத்தில் விவசாயப் பணிகள் நடப்பதில்லை. விவசாயப் பணிகளே நடக்காத காலத்தில் இந்த 100 நாட்களைக் கொண்டுவரவேண்டும். இதை டெல்லியில் அமர்ந்து கொண்டு நாட்டின் மொத்தப் பரப்பளவிற்கும் திட்டம் தீட்டி விட முடியாது.

 

  • மேலும் இத்திட்டத்தினால் இடம் பெயர்தல் கணிசமாகக் குறைந்ததால், நகரத்தில் வேலையாட்கள் தட்டுப்பாடு காணப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தினால் கிராமப்புறங்களில் 2009-10, 2011-12 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மக்களின் நுகரும் சக்தி நகர்ப்புறங்களைவிட அதிகமாக இருந்தது. இந்தக் காலகட்டத்தில் உரிய நேரத்தில் வேலைக்கான கூலி தவறாமல் வழங்கப்பட்டது.

 

  • இந்தத் திட்டத்தில் குறைத்து கூலி வழங்குதல், இடைத்தரகர்கள், பஞ்சாயத்தார் கமிஷன் போன்ற அப்பட்டமான சில குறைபாடுகளைக் களைந்து இத்திட்டத்தை மேன்மேலும் வலுப்படுத்துவதை விட்டுவிட்டு, இத்திட்டத்தை ஒரு அரசியல் திட்டம் என்று முத்திரை குத்தி கைவிடுவது நியாயமில்லை. இது ஏழை கிராமவாசிகளுக்குச் செய்யும் துரோகம். வேலை அளிப்பது அல்லது வேலையில்லாதோருக்கு குறிப்பிட்ட தொகையை மானியமாக அளிப்பது அரசின் கடமை. இது அரசிற்கான கட்டளைக் கோட்பாடு. கடந்த ஓராண்டில் இந்தத் திட்டம் வெகுவாகவே முடக்கப்பட்டுள்ளது. 2012-13ல் 100 நாட்கள் வேலை 51.73 லட்சம் குடும்பதாரர்களுக்கு கிடைத்தது. அது 2013-14ல் 46.73 லட்சமாகக் குறைந்துவிட்டது. இப்பொழுது அது 23.24 லட்சமாகக் குறைந்துவிட்டது. 2013-14ல் இத்திட்டத்திற்காக 27,454 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2014-15ல் இது 17,074 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தில் சேர்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் கூலி உரிய நேரத்தில் சரியாகத் தாமதமில்லாமல் கொடுக்கப்பட்டால், அதிகம்பேர் இத்திட்டத்தில் சேர்வார்கள், பயனடைவார்க

 

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM

 

No Comments

Sorry, the comment form is closed at this time.