Study Materials

காந்தவியல்

காந்தவியல்

Magnetism 

  • காந்தவியல்
  • புவிக் காந்தப்புலம் மற்றும் புவிக் காந்தக் கூறுகள்
  • புவிக் காந்தப் பண்பிற்கான காரணங்கள்
  • காந்தங்களின் அடிப்படைப் பண்புகள்
  • காந்தத் திருப்புத் திறன்
  • காந்தப்புலம்
  • காந்த விசைக் கோடுகள்
  • காந்தப் பாயம் மற்றும் காந்தப் பாய அடர்த்தி
  • இரு காந்த முனைகளுக்கு இடையே உள்ள விசை
  • காந்தப் பொருள்களை வகைப்படுத்துதல்

காந்தவியல்

  • காந்தவியல் என்ற சொல்லானது கிரேக்க நாட்டிலுள்ள மக்னீஷியா எனப்படும் தீவில் கண்டெடுக்கப்பட்ட மேக்னடைட் (Fe3O4) என்ற இரும்புத் தாதுவின் பெயரிலிருந்து ஏற்பட்டது கி.மு 2000 ஆண்டிலேயே காந்தத்தின் பண்புகளை சீன மக்கள் பயனங்களின்போது திசையை அறிய சுழல் காந்த ஊசியினை சீனர்கள் பயன்படுத்தினர்.
  • ஆனால் கிலபாட் (Gilbert) என்பவரே காந்தவியலின் அடிப்படை கோட்பாடுகளை நிறுவியவராவார்.
  • அவரே புவியானது மிகப்பெரிய சட்டக் காந்தமாகச் செயல்படுகிறது என்ற கருத்தையும் தெரிவித்திருந்தார்.
  • புவியில் மேற்பரப்பில் செயல்படும் காந்தப்புலத்தின் மதிப்பு ஏறத்தாழ 10-4 T ஆகும்
  • இக்காந்தப்புலமானது புவியின் ஆரத்தினைப் போல ஐந்து மடங்கு உயரத்திற்கு பரவியுள்ளது

புவிக் காந்தப்புலம் மற்றும் புவிக் காந்தக் கூறுகள்

  • புவியின் மீது ஒரு புள்ளியில் தடையின்றி தொங்கவிடப்பட்ட காந்த ஊசியானது ஏறத்தாழ புவியின் வட தென் திசையில் ஓய்வு நிலையை அடையும் இதிலிருந்து புவி மிகப் பெரிய காந்த இரு முனையாகச் செயல்படுகின்றது எனவும் அதன் காந்த முனைகள் புவியியல் துருவங்களுக்கு அருகில் உள்ளன எனவும் அறியலாம் ஒரு காந்த ஊசியின் வடமுனை ஏறத்தாழ புவியியல் வட முனையை (NG) நோக்கி நிற்பதால் (NG) க்கு அருகில் அமைந்த புவிக்காந்த முனையினை புவிக் காந்தத்தின் தென்முனை (Sm) எனலாம்.
  • புவியியல் தென் முனைக்கு (SG) அருகில் அமைந்த புவிகாந்த முனையினை புவிக்காந்தத்தின் வடமுனை (Nm) எனவும் அழைக்கலாம்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker