Study Materials

மின்னோட்டத்தின் காந்த விளைவு

மின்னோட்டத்தின் காந்த விளைவு

Magnetic effect of electric current

  • மின்னோட்டத்தின் காந்த விளைவு
  • மின்காந்தத் தூண்டல்
  • மின்னியற்றி
  • மின்காந்தத் தூண்டல் பற்றிய ஃபாரடே விதிகள்
  • மின்மோட்டார்

மின்னோட்டத்தின் காந்த விளைவு

  • காந்தத்தைச் சுற்றிலும் அதன் விசை உணரப்படும் பகுதி காந்தப்புலம் எனப்படும்
  • இரும்புத்துகள்களால் ஒருங்கமைக்கப்பட்டு உருவாகும் கோடுகள் காந்த விசைக் கோடுகள் எனப்படும்
  • காந்தப்புலம் எண்மதிப்பும், திசையும் கொண்ட அளவாகும்.
  • காந்தத்தின் உள்ளே புலக்கோடுகள் தென்முனையில் தொடங்கி வடமுனையில் முடியும். காந்தப்புலக் கோடுகள் மூடியவளைகோடுகளாகும். இவை ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாது

மின்காந்தத் தூண்டல்

  • ஒயர்ஸ்டட் சோதனையின் மறுதலை விளைவை மைக்கேல் ஃபாரடே சோதனை மூலம் செய்து காட்டினார் ஒரு கடத்தியுடன் தொடர்பு கொண்ட காந்தப் பாயத்தை மாற்றுவதன் மூலம் அக்கடத்தியின் முனைகளுக்கிடையே மின்னியக்கு விசையை தூண்டுவதற்கான வாய்ப்பை விளக்கினார். இது மின்காந்தத் துண்டல் என அழைக்கப்பட்டது மின்காந்தத் தூண்டல் கண்டுபிடிப்பானது மின்னாற்றல் உற்பத்தியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது

மின்னியற்றி

  • குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக அதன் திசையை மாற்றிக் கொள்ளும் இவ்வகையான மின்னோட்டம் மாறுதிசை மின்னோட்டம் (AC) எனப்படும். இம்மின்னியற்றி மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி எனப்படும்
  • குறைந்த மாறுதிசை மின்னழுத்தத்தை அதிக மாறுதிசை மின்னழுத்தமாகவும் அதிக மாறுதிசை மின்னழுத்தத்தை குறைந்த மாறுதிசை மின்னழுத்தமாகவும் மாற்ற உதவும் மின்சாதனம் மின்மாற்றி எனப்படுகிறது இது மின்னாற்றலை ஒரு சுற்றிலிருந்து மாற்றொரு சுற்றுக்கு மாற்றுகிறது மின்மாற்றியானது மின்காந்தத் தூண்டல் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது

 

[wpsm_button color=”green” size=”big” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” icon=”none” class=””]Click Here to Download[/wpsm_button]

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker