எந்திரவியல் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

எந்திரவியல் என்பது இயற்பியலின் ஒரு பிரிவு ஆகும்.  இது, நம்மைச் சுழ்ந்துள்ள பொருள்களின் இயக்கம் அல்லது பொருள்களின் ஒய்வுநிலை (Motion or rest)  இவற்றைப் பற்றிய அறிவியல் பகுதி எனப்படுகிறது.  இயக்கவியல் (Dynamics) பொருள்களின் இயக்கங்களைப் பற்றியும், நிலையியல் (Statics) பொருள்களின் சமநிலையைப் பற்றியும் விளக்குகிறது.

எந்திரவியலின் அடிப்படைக் கருத்துகள்;

 • பொருளொன்றின் மீது விசை செயல்படும்போது விசையின் திசையில் பொருளானது நகர்ந்தால் விசையால் வேலை செய்யப்பட்டது எனலாம். W=FxS.
 • வேலை செய்யப்படும் வீதம் திறன் எனப்படும். அதன் அலகு வாட் ஒரு வினாடி நேரத்தில் செய்யப்படும் வேலை ஒரு ஜூல் எனில் அதனால் வெளிப்படும் திறன் 1 வாட் ஆகும். சாதாரணமாகத் திறன் கிலோவாட் என்ற அலகால் குறிக்கப்படும்.

1 கிலோவாட் = 1000 வாட்

 • மின் திறனானது கிலோவாட் மணி (Kilowatt hour) என்ற அலாகல் அளக்கப்படுகிறது.  இதனை மின்சார அலகாக ஒரு யூனிட் என்கிறோம்.
 • எந்திரங்களின் திறன் பொதுவாகக் குதிரைத் திறன் (Horse Power ) என்ற அலகால் அளக்கப்படுகிறது.

1 H.P. = 746 வாட்

 • ஒரு பொருளின் ஆற்றல் என்பது அது வேலை செய்யும் அளவைக் குறிப்பதாகும். ஒரு பொருள் தன்னுடைய நிலையினால் பெற்றுள்ள ஆற்றல் நிலையாற்றல் எனப்படும். நிலையாற்றல் = mgh ஜூல் (ஆற்றலின் அலகு ஜூல் ஆகும்)
 • ஒரு பொருள் அதன் இயக்கத்தினால் பெற்றுள்ள ஆற்றலை இயக்க ஆற்றல் என்கிறோம்.

இயக்க ஆற்றல் = ½ MV2   ஜூல்

 • ஆற்றல் அழிவின்மை விதி, “ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது“ என்பதை வரையறுக்கிறது. ஒரு வடிவத்திலுள்ள ஆற்றல் மறைந்தால், அது எந்த வித  ஆற்றல் இழப்புமின்றி மற்றொரு வடிவில் தோன்றும்.
 • இணை விசைகளை ஒத்த இணை விசைகள் 2. மாறுபட்ட இணை விசைகள் என இரு வகையாகப் பிரிக்கலாம்.
 • இரண்டு சமமான, மாறுபட்ட இணை விசைகள் ஒரே புள்ளியில் செயல்படாத போது ஒர் இரட்டை (Couple) உருவாகிறது.
 • பொருளொன்றின் மீது விசை செயல்படும்போது அதன் அச்சைப் பற்றிச் சுழலக்கூடிய சுழற்று விளைவு விசையின் திருப்புத் திறன் எனப்படும்.
 • இடஞ்சுழி திருப்புத் திறன்களின் கூட்டுத் தொகைக்குச் சமம்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]