பிரதமரின் எல்.பி.ஜி மான்ய பாகல் திட்டம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 • உண்மையில் எல்.பி.ஜி. பாகல் அல்லது நேரடி மான்ய திட்டம் 2013-ல் காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கிவிட்டது. இத்திட்டத்தின் குறிக்கோள்கள்ஏறக்குறைய தற்போதைய குறிக்கோளை ஒத்தது. ஆனால் நடைமுறைப்படுத்துதலில் தான் இரண்டுக்கும் சில வித்தியாசங்கள். அதில் மிக முக்கியமானது இத்திட்டத்தில் இணைய ஆதார் அட்டை அவசியம் என வரையறுத்தது. அதனாலேயே இத்திட்டம் 2013-ல் போதிய வெற்றிபெறவில்லை.

2016-08-06_18-43-59

 

 

 • அடுத்து வந்த பாரதிய ஜனதா அரசு முதல்கட்டமாக 54 மாவட்டங்களில், 2.4 கோடி பயனாளிகளை மட்டும் குறிவைத்து இத்திட்டத்தை சோதனை ஓட்டமாக அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் இத்திட்டத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன என்ற தெளிவு வரவே நாடெங்கும் விரிவுபடுத்தியது. மேலும் ஆதார் எண் வேண்டுமென்பதை பா.ஜ அரசு கட்டாயமாக்கவில்லை.
 • புதிய பாகல் திட்டம் அனைத்து எல்.பி.ஜி. நுகர்வோரும் மான்யத்துக்கு தகுதியானவர் என்கிறது. மான்யத்தை நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்குக்கு மாற்ற இத்திட்டம் இரண்டு வழிமுறைகளை முன்வைக்கிறது.
 • ஆதார் எண் உள்ளவர்களுக்கு: ஆதார் எண்ணானது வங்கிக் கணக்குடன் இணைக்கப்படும். எல்.பி.ஜி. இணைப்பு விவரங்களும் வங்கிகளுக்குத் தரப்படும். கேஸ் சிலிலிண்டரானது நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டதும் மான்யம் நேரடியாக வங்கிக் கணக்குக்கு அனுப்பப்படும்.
 • ஆதார் எண் இல்லாதவர்கள் இரண்டு விதத்தில் மான்யத்தைப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
 • முதல் வழிமுறைப்படி, எல்.பி.ஜி. விநியோகஸ்தர் நுகர்வோரின் வங்கிக் கணக்கு விவரம், ஐ.எஃப்.எஸ்.சி. எண், வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பெயர், தொடர்பு விவரம், முகவரி போன்ற அனைத்தையும் கேட்டுப் பெறுவார். இந்த விவரங்கள் எல்.பி.ஜி. நிறுவனத்தின் தரவுத்தளத்தில் சேகரிக்கப்படும்.
 • இரண்டாம் வழிமுறைப்படி, வங்கியானது மேலே குறிப்பிட்ட அனைத்து விவரங்களுடன் நுகர்வோரின் 17 இலக்க எல்.பி.ஜி. எண்ணையும் பெற்று தங்கள் தரவுத் தளத்தில் சேகரித்துக்கொள்ளும். இதன் மூலம் வங்கி நுகர்வோருக்கு மான்யத்தை அனுப்ப இயலும்.

 

பாகல் திட்டத்தின் பயன்கள்

 • மான்யம் நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் மான்யம் என்பது நேரடி சந்தை விலைக்கும், வாடிக்கையாளர் பெறும் விலைக்கும் இடையிலான வித்தியாசமாகும். இந்தத் தொகையே வாடிக்கையாளர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
 • முறையற்ற வகையில் விற்பனைசெய்யப் படும் கேஸ் சிலிலிண்டர்களின் எண்ணிக்கை இதனால் குறைகிறது. இதனால் இதற்கு அளிக்கப்படும் மான்யம் அரசுக்கு மிச்சமாகிறது.
 • எண்ணெய் நிறுவனங்கள், இடைத்தரகர்கள் இல்லாமலே தங்கள் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை அறியவருகின்றன. இதன்மூலம் முன்னுதாரணமான வாடிக்கையாளர் உறவு உருவாகிறது.
 • மேலும் ஒரே பெயரில் ஒருவர் பல இணைப்புகளைப் பெற்று எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படுத்தும் இழப்பைத் தடுக்கமுடிகிறது.