உள்ளாட்சி அரசாங்கம்

உள்ளாட்சி அரசாங்கம் (Local Self Government)

  • ஒரு குறிப்பிட்ட சிறிய நிலப்பரப்பில் வாழும் மக்கள் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்படுத்தப்படும் ஒரு அமைப்பு உள்ளாட்சி அரசாங்க அமைப்பு எனப்படும்.

உள்ளாட்சி அமைப்பின் பணிகள்

  1. தெருக்கள் பொது இடங்களுக்கு விளக்குப் போடுதல் தண்ணீர் வசரி பிறப்பு இறப்பு பதிவு தொடக்க கல்வி மருத்துவமனை தீயணைப்பு போன்ற பொதுநலத்திற்கு அவசியமானவை கட்டாயப் பணிகளாகும்.
  2. பூங்கா அமைத்தல் பொது தோட்டங்கள் நூலகங்கள் நீச்சல் குளங்கள் மணமகிழ் மன்றங்கள் போன்ற வசதிகள் செய்து தருவது விருப்ப்ப் பணிகள் ஆகும்.

இந்தியாவில் உள்ளாட்சி அரசாங்கம்

  1. 1687 1688 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதலாவது உள்ளாட்சி அமைப்பான சென்னை மாநகராட்சி ஏற்படுத்தப்பட்டது.
  2. உள்ளாட்சியில் முக்கிய சீர்திருத்தங்களை ரிப்பன் பிரபு கொண்டுவந்தார் உள்ளாட்சி துறையின் தந்தை என ரிப்பன் பிரபு அழைக்கப்படுகிறார்.
  3. இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட பல்வந்தராய் மேத்தா தலைமையிலான கமிட்டி1957 ம் ஆண்டு சமர்பித்த அறிக்கையில் மக்களாட்சி அதிகாரப் பரவல் எனும் திட்டத்தை பரிந்துரைந்த்து இதுவே பஞ்சாயத்து ராஜ் எனப்படுகிறது அதன்படி
  4. மூன்றடுக்கு கிராமப்புற உள்ளாட்சி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் இம்மூன்று அடுக்கு முறையில் கிராம மட்டத்தில் பஞ்சாயத்தும் வட்டார அளவில் பஞ்சாயத்து ஒன்றியமும் மாவட்ட நிலையில் மாவட்ட பஞ்சாயத்தும் இடம் பெற வேண்டும். இம்மூன்றும் மறைமுகத் தேர்தல் மூலம் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட வேண்டும்.
  5. திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டு பணிகள் இவற்றிடம் ஒப்படைக்கப்படவேண்டும்
  6. மாவட்ட ஆட்சியர் மாவட்டப் பஞ்சாயத்தின் தலைவராக செயல்பட வேண்டும்
  7. உண்மையான அதிகாரம் பொறுப்புகள் மற்றும் நிதிகள் இவற்றிற்கு வழங்கிட வேண்டும். மேற்கொண்ட பரிந்துரைகளின்படி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு முதன் முதலில் இராஜஸ்தானில் நகூர் கிராமத்தில் அக்டோபர் 2 1959 ல் தொடங்கப்பட்டது. இரண்டாவதாக ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.