லென்சுகள் | tnpsc study materials - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET

லென்சுகள் | tnpsc study materials

maanavan physics

இருபுறமும் கோளகப் பரப்புகளாலோ அல்லது ஒருபுறம் கோளப் பரப்பு மற்றொரு புறம் சமதளப் பரப்புகளாலோ அமைந்த ஒளிபுகும் பொருளின் ஒரு பகுதியே லென்சுகள்  எனப்படும்.  இரண்டு வகையான லென்சுகள் உள்ளனஅவையாவன;

1, குவிலென்சு மற்றும் 2 குழிலென்சு.

லென்சு சமன்பாடு:

    ஒரு லென்சில் பொருளின் தொலைவு (ர) பிம்பத்தின் தொலைவு (டி) குவியதூரம் (க) ஆகியவற்றிக்கிடையேயான தொடர்பு லென்சு சமன்பாடு எனப்படும்.

1|f = 1|v – 1|u

லென்சின் திறன்:

ஒரு லென்சின் குவியதொலைவின் தலைகீழி அதன் திறன் எனப்படும்திறனின் டையாப்படர் (D)   கணக்கு; ஒரு மெல்லிய லென்சில் குவியத்தொலைவு 40 செ.மீ எனில் அதன் திறன் யாது?

F=40 nr.kp. = 40×10-2  kp.p =?

திறன்  P=1/f;           p=1/40×10-2

                         P=100/40=2.5D

லென்சில் திறன்          = 2.5 D.

குவிலென்சு:

ஒரு குவிலென்சானது மையத்தில் தடிமனாகவும், வெளிப்பகுதியில் மெல்லியதாகவும் இருக்கும்ஒளிக்கதிர்களில் இணைக்கற்றையானது குவிலென்சில் பட்டு விலகல் அடைந்து குவிக்கப்படுகின்றது.   எனவே இவ்வகை லென்சினை குவியப்படுத்தும் லென்சு எனலாம்.

குழிலென்சு:

ஒரு குவிலென்சானது மையத்தில் மெல்லியதாகவும் தடிமனாகவும் இருக்கும்ஒளிக்கதிர்களில் இணைக்கற்றையானது  குழிலென்சில் பட்டு விலகம் இடைய விரிகின்றனஎனவே இவ்வகை லென்சினை விரிக்கும் லென்சு எனலாம்.

குவிலென்சில் குவியப்படுத்தும் விளைவால் ஏற்படும் சில தீமைகள்:

  1. சூரியனை நேரடியாகப் பார்ப்பது நல்லதல்ல. இதற்கு காரணம், சூரிய ஒளியின் இணைக்கற்றையானது கண்ணின் விழித்திரையின் மீது குவிக்கப்படுகின்றனஅதிகச் செறிவு மற்றும் வெப்பம் காரணமாக விழித்திரை கடுமையாக பாதிப்படையும்.
  2. கண்ணாடி புட்டிகளை காடுகளில் விட்டுவிட்டு வரக்கூடாது. இதற்கு காரணம், சூரிய ஒளியின் இணைக்கற்றையானது காடுகளில் விடப்படும் கண்ணாடி புட்டிகளில் விழுகின்றனபுட்டிகளின் பரப்புகள் குவிலென்சு போல செயல்பட்டு ஒளிக்கதிர்கள் ஒரு புள்ளிகளில் குவிக்கப்படுகின்றன. அப்புள்ளிகளில் உலர்ந்த இலைகள் மற்றும் தாவரங்கள் இருந்தால், அவை வெப்பம் அடைந்து எரிகின்றனஎனவே காட்டுத்தீ உருவாகும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.