விசையும் இயக்க விதிகளும் | tnpsc study materials

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

இயக்கத்திற்கான முதல்விதி (நிலைம விதி)

  • நியுட்டனின் முதல்விதிப்படி சமமற்ற புறவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஒய்வு நிலையையோ ஒரே நேர்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல், தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்.
  • இதன் மூலம் எல்லாப் பொருள்களும் தமது இயக்க நிலையில் ஏற்படும் மாற்றத்தை எதிர்க்கும் தன்மை உடையவை எனக் கொள்ளலாம்.
  • புறவிசைகள் செயல்படாத நிலையில் ஒய்வு நிலையில் உள்ள பொருள் ஒன்று தொடர்ந்து ஒய்வு நிலையிலும், இயக்க நிலையில் உள்ள பொருள் ஒன்று தொடர்ந்து சீரான இயக்கநிலையிலும் இருக்கும்.
  • பொதுவாகப் பொருளின் இப்பண்பு நிலைமம் எனப்படும். எனவே, நியுட்டன் முதல் விதியை நிலைம விதி என்கிறோம்.

இயக்கத்திற்கான இரண்டாம் விதி

  • ஒரு பொருளின் ஏற்படும் உந்தமாற்றத்திற்கான விசை, உந்த மாற்றம் நிகழ்ந்த கால வீதத்தையும் சார்ந்து அமைகிறது எனலாம்.
  • நியுட்டனின் இரண்டாம் இயக்க விதியின்படி உந்த மாறுபாட்டுவீதம் சமமற்ற விசைக்கு நேர்தகவில் அமைவதோடு அவ்விசையின் திசையிலேயே அமையும்.
  • ஃ F ஆல்பா ma]
  • அதாவது, விசை என்பது பொருளின் நிறை மற்றும் முடுக்கம் இவற்றின் பெருக்கற்பலன் ஆகும்.

இயக்கத்திற்கான மூன்றாம் விதி

  • நியுட்டனின் மூன்றாவது விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான ஆனால், எதிர்திசையில் செயல்படுவதுமான ஒர் எதிர்வினை உண்டு.
  • துப்பாக்கி சுடும்போது குண்டு அதிக விசையுடன் முன்னோக்கிப் பாய்வது வினையாகும். இதற்குச் சமமான எதிர்விசையுடன் குண்டு துப்பாக்கியைப் பின்னோக்கித் தள்ளுவது எதிர் வினையாகும்

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]