Study Materials

சட்டங்களும் ஒப்பந்தங்களும்

சட்டங்களும் ஒப்பந்தங்களும்

Laws And Contracts

  • இந்திய விடுதலைப்போர் பல்வேறு சட்டங்களும் ஒப்பந்தங்களும்
  • வட்டமேசை மாநாடுகள்

இந்திய விடுதலைப்போர் பல்வேறு சட்டங்களும் ஒப்பந்தங்களும்

  • 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போரும் அதன் பிறகு இந்திய மக்களிடம் தோன்றிய இந்திய தேசியமும் மாபெரும் போராட்டமாக மாறின
  • 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போரின் விளைவாக விக்டோரியா மகாராணியின் அறிக்கை 1858 ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது.
  • விக்டோரியா மகாராணி அறிக்கைக்குப் பின் கொண்டு வரப்பட்ட இந்திய கவுன்சில் சட்டம் (1861) இந்திய கவுன்சில் சட்டம் (1893), மின்டோ மார்லி சீர்திருத்தம் (1909) ஆகிய மூன்றையும் இந்தியாவில் பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கான பாதை என்றும் 1919 ல் கொண்டு வரப்பட்ட மான்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம், 1935 ல் கொண்டு வரப்பட்ட இந்திய அரசாங்கச் சட்டம் ஆகிய இரண்டையும் இந்தியாவில் பொறுப்புணர்வு அரசாங்கத்திற்கான பாதை என்றும் வரலாற்று ஆசிரியர் குரோவர் குறிப்பிடுவார்.

20 ஆம் நூற்றாண்டில் முதல் பகுதியில் சட்டங்கள், சலுகைகள்

(1909 – 1935)

  • மிண்டோ மார்லிசிர்திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கான சூழல், மின்டோ மார்லி சீர்திருத்தம். மான்டேகு செமஸ்போர்டு சீர்திருத்தம், ரௌலட் சட்டம், சைமன் கமிஷன் அறிக்கை, நேரு அறிக்கை, ஜின்னாவின் 14 அம்ச கோரிக்கை, லண்டன் வட்ட மேஜை மாநாடு, காந்தி இர்வின் ஒப்பந்தம், மெக்டொனால்டு விருது, பூனா ஒப்பந்தம், இந்திய அரசாங்க சட்டம் 1935 ஆகியவை குறித்து இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளது.
  • 1857 ஆம் ஆண்டு தோன்றிய பெரும் புரட்சியில் முஸ்லீம்கள் ஈடுபட்டனர். ஆனால் இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகள் முஸ்லீம்களிடையே ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது. தங்கள் முன்னேற்றத்திற்கு தனியாக ஒரு அமைப்பு தேவை என்பதை உணர்ந்தனர்
  • பிரித்தாளும் கொள்கையை பின்பற்றிய ஆங்கில அரசு முஸ்லீம்களின் வேண்டுகோளை ஏற்றது.
  • 1906 ஆம் ஆண்டு டாக்கா நகரைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவரது தலைமையில் முஸ்லீம்லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது
  • முஸ்லீம்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, அவர்களுக்கு மேலும் பல சலுகைகளைப் பெறுவது, காங்கிரஸிலிருந்து அவர்களை தனியாகப் பிரிப்பது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக நடந்து, தனித்தொகுதி பெறுவது ஆகியவற்றை நோக்கங்களாக முஸ்லீம்லீக் கட்சி கொண்டிருந்தது.

மின்டோ மார்லிச் சீர்த்திருத்தங்கள் (1909)

  • முஸ்லீம்களை திருப்திபடுத்த, 1909 ஆம் ஆண்டு மின்டோ மார்லி சீர்த்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகள் வழங்கப்பட்டன. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது

முதல் உலகப்போர் (1914 – 1918)

  • கி.பி. 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தோன்றியது இப்போரில் பிரிட்டன், பிரான்ஸ், இரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டன ஆங்கிலேயரின் சார்பில் இந்தியர்கள் இப்போரில் தீவிரமாக பங்கு பெற்றனர். இதன்மூலம் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு பொறுப்பாட்சி வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இந்தியர்களுக்கு ஏற்பட்டது

[wpsm_button color=”orange” size=”big” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” icon=”none” class=”” target=”_blank”]Click Here to Download[/wpsm_button]

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker