Kirittava Kappiyam | TNPSC | TET Study Materials

கிறித்தவக் காப்பியம்

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • இத்தாலிய நாட்டுப் பாதிரியார் ஆகிய வீரமாமுனிவர் பல்வேறு துறைகளில் தமிழ்த் தொண்டாற்றிய அறிஞர் ஆவார்.
  • ஏசுபெருமானுடன் தொடர்புடைய சோசப்பின் வரலாற்றை அவர் 3615 பாடல்கள் கொண்ட பெருங்காப்பியமாக எழுதியுள்ளார்.
  • சூசையப்பர் மேரியம் மையின் இல்லற வாழ்வைச் சிறப்பித்தும், துறவற வாழ்வின் மேம்பாட்டை விளக்கியும் இந்நுால் சுவைமல்கித் திகழ்கிறது. பாலித்தீன் நாட்டையும் செருசலேம் நகரையும் கூறுமிடத்தும், தமிழ்க் காப்பிய நாட்டுபடல், நகரப் படலங்களுக்குரிய புனைவு முறைகளையே ஆசிரியர் பின் பற்றுகிறார்.
  • தாம் பாடும் நாடும் நகரமும் பாலை நிலம் சார்ந்தவை என்பதை முனிவர் மறந்து விடுகிறார்.
  • சோசப்பை வளன் என்றும் சானைக் கருணையன் என்றும் ஐசக்கை நகுலன் என்றும் இவ்வாறு தமிழில் மாற்றியமைக்கிறார்.
  • திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் மிகுதியாக எடுத்தாண்டுள்ளார்.
  • கம்பராமாயணம் போலவும் சிலப்பதிகாரம் போலவும் இசை துள்ளுகின்ற, கற்பனை வளம் நிறைந்த பாடல்களை இதிற் காணலாம். பாலித்தீன் நாட்டு இன்னிசை முழக்கங்கள் இவை.

 

 

Click Here To Get More Details