கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

காலம்                       : 27.08.1876 – 26.09.1954(78 வயது)

ஊர்                             : தேரூர்

பெற்றோர்              : சிவதாணு பிள்ளை, ஆதிலெட்சுமி

மனைவி பெயர்  : உமையம்மாள்

ஆசிரியர் பணி   : தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத்            தொடங்கிக் கல்லூரி பேராசிரியராக ஓய்வுப் பெற்றவர்.

இவரின் ஆசிரியர் : சாந்தலிங்க தம்பிரான்

இயற்றிய நூல்கள்:

ஆசிய ஜோதி, மலரும் மாலையும்(கவிதை), மருமகள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்), கதர் பிறந்த கதை, உமர் கய்யாம்  பாடல்கள்(மொழிபெயர்ப்பு நூல்), தேவியின் செல்வம், கவிமணியின் உரைமணிகள், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, காந்தளூர் சாலை(வரலாற்று நூல்), பாரஸீக மொழியில் உமர்கய்யாம் பாடிய ரூபாயத்தின் மொழிபெயர்ப்பு எட்வார்ட் பிட்ஸ் ஜெரால்டுவின் ஆங்கில மொழிபெயர்ப்பு. அதனைத் தழுவி எழுந்தது உமர்கய்யாம் பாடல்கள்.

பெற்ற சிறப்புகள் :

  • 1940-பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரப்பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்
  • 1943- அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார். பெரும்பொருள் வழங்க முன் வந்த போது அதை வாங்க மறுத்துவிட்டார்.
  • 1954- கவிமணிக்கு தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
  • 2005- இந்திய அரசு முத்திரை வெளியிட்டுச் சிறப்பித்தது.

மேற்கோள்கள்:

     “மங்கையை ராகாப் பிறப்பதற்கே நல்ல
      மாதவஞ் செய்திட வேண்டுமம்மா…..”

     “வெய்யிற் கேற்ற நிழலுண்டு, வீசும் தென்றல் காற்றுண்டு
      கையில் கம்பன் கவியுண்டு, கலசம் நிறைய மதுவுண்டு…..”

     “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
      துள்ளிக் கொதிக்குது கன்றுக்கு குட்டி”

     “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா”

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.