Kavignar Mudiyarasan |TNPSC | TET Study Materials

கவிஞர் முடியரசன்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

தமிழ்நாட்டின் மூத்த தலைமுறைக் கவிஞர்களுள் ஒருவர்.

ஊர்                       :             தேனி மாவட்டம் பெரியகுளம்.

மொழி               :          தெலுங்கைத் தாய்மொழியாகக்  கொண்டவர்.

பெற்றோர்     :          திண்டுக்கல் சுப்புராயலு – சீதாலெட்சுமி.

பிறப்பு            :          7-10-1920

இயற்பெயர்:    துரைராசு

  • முடியரசன் தமிழில் அறிவுறுத்தியவர்: திரு. மீ. முத்துசாமிப்புலவர்.
  • முதல் கவிதை: ‘சாதி என்பது நமக்கு ஏனோ?
  • பொன்னி என்ற இதழில் தொடர்ச்சியாக பாரதிதாசன் பரம்பரை என்னும் பகுதியில் இவரது கவிதைகள் வெளிவந்தன. அதனால் இவரை பொன்னியின் செல்வர்  என அனைவராலும் அழைக்கப் பெற்றார்.
  • பாரதிதாசனோடு மிக நெருங்கிப் பழகி அவருடைய முற்போக்கு எண்ணங்களை ஏற்றுப்பாடியவர்.

 

கவிஞரின் படைப்புகள்

  • காவியப்பாவை – அண்ணாமலை அரசருக்கு காணிக்கை ஆக்கிய கவிதை நூல்.
  • பூங்கொடி – மணிமேகலையை அடிப்படையான புரட்சிக்காப்பியம்.
  • வீரகாவியம் – பாரசீக கதை (ஆங்கிலம்) தமிழில் மொழி பெயர்த்தார்.
  • ஊன்றுகோல் – மு. கதிரேசன் செட்டியாரின் வரலாற்று காப்பியம்.
  • பாடுங்குயில்
  • வள்ளுவர் கோட்டம்.
  • புதியதொருவிதி
  • அன்புள்ள பாண்டியனுக்கு.
  • எப்படி வளரும் தமிழ்.
  • பாட்டுப்பறவையின் வாழ்க்கைப்பயணம்– கவிஞரின் தன் வரலாற்று நூலாகும்.

 

சடங்குகளை மறுப்பவர்

  • தமது மறைவின் பொழுதும் எச்சடங்குகளும் வேண்டா என்றே உரைத்து அவ்வாறே நிறைவேறச் செய்தவர்.
  • காரைக்குடி மீ.சு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர்.
  • பூங்கொடி, காவியப்பாவை, வீரகாவியம் – என்னுங் காப்பியங்களையும் முடியரசன் கவிதைகள் என்ற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.
  • வீரப்புல்வர்என்ற பட்டத்தினை மீனாட்சிசுந்தரனார் வழங்கிப் பாராட்டினார்.

 

Click Here To Get More Details