கவிச்சக்கரவர்த்தி கம்பரின் சிறப்பு

maanavan

  • கம்பராமாயணத்தைத் தமிழில் இயற்றிய பெரும் புலவர் கம்பர்.
  • கம்பர் கவிச்சிறப்பு தமிழிலக்கிய வரலாற்றில் தலை சிறந்ததாக அறிஞர்களால் போற்றப்படுகிறது.
  • கவிச் சக்கரவர்த்தி கம்பரைப் பற்றி மகாகவி பாரதியார்தமது சுயசரிதையில் “கம்பர் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
  • “கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பர் பிறந்த தமிழ்நாடு” என்றும் அவர் பாராட்டி உள்ளார்.
  • “அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி” (அம் – அழகிய; புவி – உலகம்) என்று கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை போற்றி உள்ளார்.
  • தமிழ்மொழிக்குத் தவச் சிறப்புத் தந்தது என்ற பொருளில் நாமக்கல் கவிஞர், “தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே” என்று புகழ்ந்து உள்ளார்.
  • “கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்” எனும் பழமொழி அவரது கவித்திறத்தை உணர்த்தும் ஒன்று.
  • கம்பர் “கவிச்சக்கரவத்தி” என்றும் புகழப்படுகிறார்.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடல் இவரை விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர் என்று குறிப்பிடுகிறது.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.