காப்பியப் புலவர்கள்

tamil-grammar

  • காப்பியப் பெரும்புலவர்களில் இளங்கோவும் கம்பரும் இணையற்றவர்கள் என்பது உலகம் ஒப்பும் கருத்து. காப்பியத்திற்கென அமைந்த பண்புகளில் அவர்களின் படைப்புகள் மேலோங்கி நின்று, உலகக் காப்பியங்களுடன் போட்டி போடும் தகுதி உடையனவாகின்றன அதனால்தான் பாரதியார், யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் புமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.
  • திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தமிழுக்குக் கதியாவார் இருவர்; அவர்கள் கம்பரும் திருவள்ளுவருமே என்று குறிப்பிடுதலும் இதை வலியுறுத்தும்.
  • சாத்தனாரும் சேக்கிழாரும் சமயவுணர்வும் பக்திச் சுவையும் பொருந்தப் பெருங்காப்பியம் படைத்த பெரும் புலவர்கள் ஆவார்.
  • சேக்கிழார் மறந்தும் தீயசொற் பயிலாத மனத்துாய்மையுடன் தம் காப்பியத்தை இயற்றித் தமிழ் ஆர்வலர்களின் உள்ளத்தே நீங்காது நிலைபெற்றுள்ளார்.
  • திருத்தக்கதேவர், கச்சியப்ப சிவாச்சாரியார், உமறுப்புலவர், வீரமாமுனிவர் போன்ற காப்பியப் புலவர்களும் பிற்காலப் புராணக் காப்பியப் பெரும் புலவர்களும் தம் பெரும் புலமையை வெளிப்படுத்தித் தமிழ் மொழியைக் கவிதை வளமும் கற்பனை நலமும் கொழிக்கச் செய்துள்ளனர்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.