கம்பர்

maanavan

 • கம்பர்(கி.பி. 1180-1250) கம்பராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர்.
 • தமிழ் இலக்கியத்தில்கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம் என கருதப்படுகிறது.
 • ‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றும் இவருக்கு சிறப்பு பெயர்கள் உண்டு.

பிறப்பு மற்றும் பெயர்க்காரணம்:

 • கி.பி. 12ஆம் நூற்றாண்டில்தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவழுந்தூர் என்னும் ஊரில் பிறந்தவர்.
 • வென்னை நல்லூரைச் சேர்ந்த சடையப்ப வள்ளல் என்ற ஓரு செல்வந்தரால் இவர் வளர்க்கப்பட்டார்.
 • கம்பர்உவச்சர் குலத்தில் (பூசாரிக் குலம்) பிறந்தமையால் பெற்ற பெயர் என்று கூறுவர்.
 • காளி கோயிலில் பூசை செய்யும் மரபினர் என்று உவச்சர்கள் சுட்டப்பெறுகின்றனர்.
 • கம்பர் குழந்தையாகக் காளி கோயில் கம்பத்தின் அருகே கிடந்தமையால் இப்பெயர் பெற்றார் என்பர்.
 • கம்பங் கொல்லையைக் காத்து வந்தமையால் கம்பர் என்று அழைக்கப்பட்டார் என்றும் கூறுவர்.

கம்பராமயணமும் கம்பரும்:

 • கம்பராமயணமும் சாலிவாகன வருடம் கி.பி. 733. பிறகு எழுதப்பட்டதாக அறியப்படுகிறது.
 • வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது;. அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான்.
 • ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம்.
 • எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம கதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும்தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான்.
 • எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழ நாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ்போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான்.

சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.