கம்பர் – காலம்

maanavan

 • கம்பரது காலத்தைப் பற்றி மூன்று வேறு கருத்துகள் நிலவுகின்றன.
 • இராமாயணத்தின் தொடக்கத்தில் “கம்பர் தனியன்கள்” என்ற தலைப்பில் 17 பாடல்கள் உள்ளன.
 • இவற்றில் ஒரு பாடலில் எண்ணிய சகாப்தம் எண்ணூற்று ஏழின் மேல் என்ற தொடர் அமைந்துள்ளது.
 • இத்தொடர் இராமாயணம் எழுதப்பட்ட காலத்தை உணர்த்துவதாக உள்ளது.
 • இப்பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் இராமாயணத்தை அரங்கேற்றிய காலம் கி.பி. 885 என்று அறிஞர்கள் கூறுவர்.
 • ஆனால் இத்தனியன்கள் கம்பர் காலத்திற்கும் பின்னால் 16ஆம் நூற்றாண்டில் யாரோ சிலர் எழுதி இடைச் செருகலாகச் சேர்த்திருக்க வேண்டும் என்று வையாபுரிப் பிள்ளை கருதுகிறார்.
 • இதே போல் ஆவின் கொடைச் சகரர் என்ற பாடலை ஆதாரமாகக் கொண்டு கம்பர் காலம் கி.பி. 978 என்று சிலர் விளக்கி உள்ளனர்.
 • இது முதலாம் இராசராச சோழனுக்கு முன்பு இருந்த உத்தம சோழன் காலம் ஆகும்.
 • இந்தக் காலத்தையும் சில சான்றுகள் கொண்டு அறிஞர்கள் மறுத்து உள்ளனர்.
 • கம்பருடைய காலம் மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் என்று அறிஞர் பலரும் கூறி உள்ளனர்.
 • மூன்றாம் குலோத்துங்கன் வாழ்ந்த காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும். கி.பி. 1376இல் பொறிக்கப்பட்ட ஒரு கன்னடக் கல்வெட்டை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும். அந்தக் கல்வெட்டு தோன்றிய காலத்திற்கு முன்பு இரண்டு தலை முறை காலமாகக் கம்பராமாயணம் கன்னட நாட்டில் வழங்கி வந்ததைத் தெரிவிக்கிறது.
 • எனவே கி.பி. 1325க்கு முன்பே கம்பர் காவியம் தோன்றி இருக்க வேண்டும் என்று மா.இராசமாணிக்கனார் கருதுகிறார்.
 • கம்பர், சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவருக்குப் பிற்பட்டவர் என்பது அறிஞர் பலரும் ஒப்புக் கொண்ட உண்மை. கம்பர் சோழ மன்னனோடு மாறுபட்டு ஆந்திர நாட்டில் சில காலம் தங்கினார். அவர் தங்கி இருந்த நாடு ஓரங்கல் என்பது ஆகும். அந்த நாட்டின் அரசன் பிரதாபருத்திரன் ஆவான். அவன் காலம் கி.பி. 1162 – 1197 வரை ஆகும்.
 • இதே கால கட்டத்தில் சோழப் பேரரசனாக இருந்தவன் மூன்றாம் குலோத்துங்கன் ஆவான்.
 • இவன் காலம் கி.பி. 1178 – 1208 வரை ஆகும்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.