கமல்ஹாசனுக்கு ‘செவாலியே’ விருது: பிரான்ஸ் அரசு அறிவிப்பு

Kamal Haasan (1)

  • தமிழ் திரையுலகின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசனுக்கு செவாலியே விருது அறிவித்திருக்கிறது பிரான்ஸ் அரசு.

 

  • கலை – இலக்கியத் துறையில் தொடர் பங்காற்றி வருபவர்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் செவாலியே விருது வழங்கி கெளரவிப்பது வழக்கம். இதில் இந்திய திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் முதல் இந்திய நடிகராக சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய், நந்திதா தாஸ் ஆகியோரும் பெற்றிருக்கிறார்கள்.

 

  • அந்த வரிசையில் இந்தாண்டு செவாலியே விருதை கமல்ஹாசனுக்கு அறிவித்திருக்கிறது பிரான்ஸ் அரசு. இந்த விருது பிரான்ஸ் நாட்டின் கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது.

 

  • பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் கமல்ஹாசனுக்கு, செவாலியே விருது அறிவித்திருப்பது மற்றொரு சாதனையாக கருதப்படுகிறது. விரைவில் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் இவ்விருதை வழங்கி கெளரவிக்க இருக்கிறது பிரான்ஸ் அரசு.

 

  • கமலின் தொடரும் சாதனைகள் 1960ல் ‘களத்தூர் கண்ணம்மா’வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். இதில் நடித்ததிற்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருது கிடைத்தது. ‘மூன்றாம் பிறை’, ‘நாயகன்’, ‘இந்தியன்’ ஆகிய படங்களில் சிறந்த நடிப்புக்காக தேசிய விருதை வென்றுள்ளார்.

 

  • மேலும், இந்திய அரசாங்கத்தின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை வென்றுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். கடந்த 55 ஆண்டுகளாக திரைத்துறையில் பங்காற்றி வரும் கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இயக்குநர், பாடலாசிரியர், நடன இயக்குநர், பாடகர் என பன்முக திறமைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • சமீபத்தில் அமெரிக்காவில் ’சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய கமல்ஹாசன், அவருடைய அலுவலகத்தில் மாடிபடியில் கீழே விழுந்து காலில் அடிபட்டது. தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, வீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

 

  • திரையுலகினர் வாழ்த்து தமிழ் திரையுலகில் சிவாஜி கணேசனுக்குப் பிறகு கமல்ஹாசன் செவாலியே விருது வென்றிருப்பதால், திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.