Deal Score0

tamil-grammar

  • இது ஒரு அகநூல். கலிப்பா என்ற பாவகையால் ஆன நூல் கலித்தொகை
  • மொத்தம் 15௦ பாடல்கள் உடையது.
    கலித்தொகை ஐந்திணை நூலாகும்.
  • இதனை தொகுத்தவர் நல்லந்துவனார்.
    கற்றறிந்தோர் ஏத்தும் கலி என்று கலித்தொகை சிறப்பிக்கப்படுகிறது.
    ஏறு தழுவுதல் பற்றி கூறும் நூல் கலித்தொகை.
  • ஏறு தழுவுதல் என்பது ஒரு வீர விளையாட்டு.
    பெருந்திணைப் பாடல்கள் இடம்பெற்ற ஒரே சங்கநூல் கலித்தொகை ஆகும்.
  • நூபுரம் என்பதன் பொருள் சிலம்பு, ஆடு மேய்ப்பவர் புல்லினத்தார், குறும்பர் என்று குறிப்பிடப்பட்ட செய்தி, பசு மேய்ப்பவர் கோவினத்தார், நல்லினத்தார் என்று குறிப்பிடப்பட்ட செய்தி ஆகியவற்றை கலித்தொகை குறிப்பிடுகிறது.
  • கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும்.
  • பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூலான கலித்தொகையில் ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்ட 150 பாடல்கள் உள்ளன. அகப்பொருள் துறை பாட எற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
  • துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும்.
  • பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம் பெறுகின்றன.

பாடல் தொகைகள்

  • கலித்தொகை பாடல்களில் நல்லந்துவனார் பாடிய கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், குறிஞ்சிக்கலியில் 23 பாடல்களும், முல்லைக்கலியில் 17 பாடல்களும், மருதக்கலியில் 35 படல்களும், நெய்தற்கலியில் 33 பாடல்களும். பாலைக்கலியில் 35 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

குறிஞ்சிக்கலி

  • புணர்தலும் புணர்தலும் நிமித்தமும் குறிஞ்சி ஆகும்.

 

Click Here To Get More Details