Education News

தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனங்கள் – உதவியாளர் மற்றும் எழுத்தர் பணி | 915 Vacancies | எப்படி விண்ணப்பிப்பது?

Job Vacancies In Tamil Nadu Government Co-operative Institutions


தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனங்கள் – உதவியாளர் மற்றும் எழுத்தர் பணி

  • தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக இருக்கும் உதவியாளர் / எழுத்தர் பணியிடங்கள், கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்களின் வழியாக நிரப்பப்பட இருக்கின்றன.

காலிப் பணியிடங்கள்

  • காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 238
  • வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 162
  • தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 119
  • கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி – 90
  • தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 73
  • திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 68
  • தருமபுரி கூட்டுறவு நகர வங்கி – 7
  • இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 79
  • மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி – 79
  • (மொத்தம் 915 பணியிடங்கள்)

பணியிடங்கள் ஒதுக்கீடு:

  • மாவட்டவாரியாக பொதுப்பிரிவு, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் எனக் காலி இடங்களின் எண்ணிக்கை தரப்பட்டிருக்கின்றன.

விண்ணப்பிக்க மாவட் வாரியாகக் கடைசி நாள்:

  • 10-9-2019 முதல் 25-9-2019வரை

எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பிக்க விரும்புபவர்கள், மாவட்டவாரியாக கூட்டுறவு வங்கிகளின் ஆட்சேர்ப்பு மையங்களின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் இந்த வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு வயது வரம்பில்லை. பிற வகுப்பினர் – 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற வகுப்பைச் சார்ந்த முன்னாள் ராணுவத்தினர் – 48 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற வகுப்பைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் – 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்துப் பிரிவு விதவைகள் – வயது வரம்பில்லை.

கல்வித் தகுதி:

  • ஏதாவதொரு பல்கலைக்கழகப் பட்டம் (10+2+3) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பள்ளி இறுதி வகுப்பு அல்லது மேல்நிலைப் படிப்பு அல்லது பட்டப்படிப்பின்போது, தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம்: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. பிற விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக் கட்டணமாக ரூ.250/- செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்வழி.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு: 

  • மாவட்ட வாரியான கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆட்சேர்ப்பு மையங்களின் இணையதளங்களைப் பார்வையிடலாம் அல்லது கூட்டுறவு சங்கங்களுக்கான மாவட்ட ஆட்சேர்ப்பு மைய அலுவலகத்துக்குச் சென்று விவரங்களை அறியலாம்.

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker