Education News

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் – வேலை பழகுநர் (Apprenticeship) | 129 Vacancies | எப்படி விண்ணப்பிப்பது?

Job Vacancies In Hindustan Copper Limited


இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் – வேலை பழகுநர் (Apprenticeship)

  • ராஜஸ்தான், கேத்ரி நகரில் அமைந்திருக்கும் இந்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆலையில், இந்திய அரசின் வேலை பழகுநர் சட்டம் 1961-ன் கீழ், ஒரு வருடகால அளவிலான ஃபிட்டர், டர்னர், வெல்டர், எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், டிராஃப்ட்ஸ்மேன், டீசல் மெக்கானிக், சர்வேயர் உள்ளிட்ட 15 தொழிற்பிரிவுகளில் வேலை பழகுநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மொத்த இடங்கள் – 129

  • பணியிடங்கள் ஒதுக்கீடு
  • பொதுப்பிரிவு – 55
  • எஸ்சி – 21
  • எஸ்டி – 16
  • ஓபிசி – 25
  • ஈடபிள்யூஎஸ் – 12

கல்வித் தகுதி

  • விண்ணப்பிக்க விரும்புபவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) தொடர்புடைய தொழிற்பிரிவுகளில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
  • 2016-ம் ஆண்டுக்கு முன்பாக தொழிற்பயிற்சிபெற்றவர்கள், ‘இதற்கு முன்பாக வேறு எந்த நிறுவனத்திலும் வேலை பழகுநர் பயிற்சி பெறவில்லை’ என்று நோட்டரி பப்ளிக் வழக்கறிஞரிடம் சான்றிதழ் பெற்று, அதை சமர்ப்பிக்க வேண்டும். வயது வரம்பு (20-8-2019 அன்று) 14 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயதில் தளர்வு உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 19-9-2019

எப்படி விண்ணப்பிப்பது?

  • விண்ணப்பிக்க விரும்புபவர்கள், இந்திய அரசின் வேலை பழகுநர் பணிகளுக்கான www.apprenticeship.gov.in எனும் இணையதளத்தில் `Establishment Search’ எனும் பகுதியில் `Hindustan Copper Limited, Khetri Copper Complex for undergoing training with HCL’ என்பதைத் தேர்வுசெய்து, அங்கு வழங்கப்படும் தனிப்பட்ட எண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, நிறுவனத்தின் www.hindustancopper.com எனும் இணையதளத்தில் தகவல் குறிப்பேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களின் தொழிற்பயிற்சி மதிப்பெண்களுக்கு 70%, பத்தாம் வகுப்பு மதிப்பெண்களுக்கு 30% என்று மொத்தம் 100% எனக் கணக்கிட்டு, இடஒதுக்கீட்டு முறைகளைப் பின்பற்றி, வேலை பழகுநர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பயிற்சிக்கான ஆணை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இந்திய அரசின் வேலை பழகுநர் சட்டத்தின் கீழான உதவித்தொகை வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு: www.hindustancopper.com எனும் இணையதளத்தைப் பார்க்கலாம்.

Related Articles

Back to top button
Close