Education News

ஏர் இந்தியா (Air India) – பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணி | 60 Vacancies | எப்படி விண்ணப்பிப்பது?

Job Vacancies In Air India


ஏர் இந்தியா (Air India) – பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணி

  • ஏர் இந்தியா, எஸ்.பி.ஐ, இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களில் இருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
  • ஏர் இந்தியாவின் டெல்லி அலுவலகத்தில், 60 பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் நிலையான விதிமுறையுடன்கூடிய ஒப்பந்த அடிப்படையில் (On Fixed Contract Basis) நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் ஒதுக்கீடு

  1. பொதுப்பிரிவு – 22
  2. எஸ்சி – 9 எஸ்டி – 7
  3. ஓபிசி – 14
  4. ஈடபிள்யூஎஸ் – 8.

வயது வரம்பு (1-8-2019 அன்று)

  1. பொதுப்பிரிவினர் 28
  2. எஸ்சி, எஸ்டி – 33
  3. ஓபிசி – 31-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

  • விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பி.இ / பி.டெக் (கணினிப் பொறியியல்) அல்லது அதற்கு இணையான பல்கலைக்கழகப் பட்டப்படிப்புடன், 70 சதவிகிதத்துக்கும் அதிகமான மதிப்பெண்களுடன் GATE-2019 தேர்வில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும் அல்லது கணினியியல் பாடத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பில் (எம்சிஏ / எம்.எஸ்சி) தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

  • இணையம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள் – 18-9-2019
  • தேர்வுமுறை: விண்ணப்பித்தவர்களில், செப்டம்பர் / அக்டோபர் 2019-ல் நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்குப் பிறகு, எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு, இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, பயிற்சிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். பிறகு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, பணிக்கான ஆணை வழங்கப்படும். ஐந்து வருட ஒப்பந்த அடிப்படையிலான இந்தப் பணியில், பயிற்சிக்கான காலத்தை ஏர் இந்தியா நிறுவனமே முடிவுசெய்யும்.
  • பயிற்சியின்போது, மாதந்தோறும் ரூ.25,000/- உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை சிறப்பாக நிறைவுசெய்தவருக்கு நிலையான விதிமுறையுடன்கூடிய ஒப்பந்த அடிப்படையிலான உதவிக் கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் அளிக்கப்பட்டு, மாதம் ரூ.45,000/- அளிக்கப்படும். இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், ரூ.50,000/- வங்கி ஈட்டுறுதி (Bank Guarantee) அளிக்கவேண்டியிருக்கும்.

மேலும் தகவல்களுக்கு: https://ota.airindia.in/erecruitmenttraineecontroller/index.aspx எனும் இணையதளத்தில் பார்க்கவும்.


 

Related Articles

Back to top button
Close