ஜீவன்தயே ஆரோக்யா யோஜனா

Image result for handicapped yojana

 

  • ராஜீவ்காந்தி ஜீவன்தயே ஆரோக்யா யோஜனா, தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உடல்நலம் மற்றும் மனநலத்தை முடக்கும் ஆபத்தான நோய் களுக்கு செலவு செய்ய இயலாத ஏழைக் குடும்பங்களுக்கு உதவ மகாராஷ்டிர அரசு தோற்றுவித்த திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டுக்கு மேலுள்ளவர்களில் வெள்ளை நிற ரேஷன் அட்டை பயன்படுத்து பவர்களைத் தவிர ஏனையோர் பயன்பெறுவர். இத்திட்டத்தில் பதிவுசெய்துகொண்டவர் களுக்கு அறுவை சிகிச்சை, சிறப்பு தெரபி சிகிச்சைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும்.

 

  • மூன்றாண்டுகளுக்கு நாடு முழுவதும் இத்திட்டம் தொடரத் திட்டமிடப் பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 35 மாவட்டங்களைச் சேர்ந்தோர் இத்திட்டத் தால் பயன்பெறுவர். அறுவைச் சிகிக்சைகள், அனைத்து வகையான புற்றுநோய், பிளாஸ்டிக் சர்ஜரி, தீக்காயம், மன அதிர்ச்சி, இதர சிறப்பு மருத்துவ சிகிச்சைகளென 30 வகைப்பாட்டில் வரும் 121 பாலோ அப் பேக்கேஜ் சிகிச்சைகள், 971 மருத்துவ நடைமுறைகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இவையனைத்தும் கல்லூரிகளிலேதான் செயல்படுத்தப்படவேண்டும்.

 

  • இத்திட்டத்தால் பயன்பெறும் குடும்பமும் மகாராஷ்டிராவின் 35 மாவட்டங்களில் ஒன்றைச் சேர்ந்ததாக மஞ்சள் அல்லது ஆரஞ்சு ரேஷன் அட்டை, (ஆஆவ) ஏஏஒய் அட்டை, அன்னபூர்ணா அட்டை இவற்றிலொன்றைக் கொண்டிருக்க வேண்டும்.

 

  • இத்திட்டம் அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை அல்லது அறுவைச் சிகிச்சை அனைத்தையும் அளிக்கும்.

 

  • ஒரு குடும்பத்துக்கு ஆண்டொன்றுக்கு, இத்திட்டத்தின் கீழ்வரும் மருத்துவமனைகளொன்றில் ரூ. 1,50,000 வரை செலவிடப் படும்.

 

  • இத்திட்டத்துக்கான அட்டையின் காலவரம்பு முடிந்து ஒரு மாதம் வரைக்கும், அட்டை செல்லுபடியாகும். மேலும் அறுவைச் சிகிக்சைக்குப் பின்பான பத்துநாள் சிகிச்சை, பழைய நிலைக்கு மீளுதல், எதிர் பாராமல் நோயாளி இறந்தால் அவரது உடலை ஊருக்கு கொண்டு செல்லுதல் அனைத்தும் திட்டத்துக்குள் அடங்கும்.

 

  • இத்திட்டம் காசு தேவைப்படாத திட்ட மாகும். நோயாளி மருத்துவமனைக்குள் எதற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.

 

  • மருத்துவமனைக்கு, பணம் இணையத் தொடர்பின் மூலம் அளிக்கப்படும். நோயாளி தனது சுகவீனத்தை பல்வேறு ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.