ஜவஹர்லால் நேரு

  • இந்திய அரசியலமைப்புப் பேரவையின் முதல் கூட்டத்தொடரில், 1946 டிசம்பர் 13 ஆம் நாள், நோக்கத் தீர்மானத்தை, ஜவஹர்லால் நேரு முன் மொழிந்தார்.
  • இத்தீர்மானம் சில மாறுதல்களுடன் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையாக அமைக்கப்பட்டது.
  • 1949 அக்டோபர் 17 ஆம் நாள் சிறப்பு வாக்கெடுப்பின் வழியாக அரசியலமைப்புச் சட்டத்தின் அங்கமாகியது.

அரசியலமைப்புச் சூழல் ஆராய பல்வேறு குழுக்கள் அமைத்தல்

  • அரசின் அமைப்பு, ஒன்றிய அரசு, மாநில அரசு இவற்றின் இடையே நிலவக்கூடிய உறவு, அதிகாரப் பங்கீடு, அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் நலம், பழங்குடியினர் நலம், நீதிமன்றம் மற்றும் அரசின் பல்வேறு பரிமாணங்களை ஆய்வதற்குப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன.
  • இந்திய அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்களே இப்பல்வேறு குழுக்களிலும் இடம் பெற்றிருந்தனர்.

சுதந்திரத்திற்குப் பின் வரைவுக்குழு

  • 1947 ஆகஸ்ட் 27 ஆம் நாள், டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் தலைமையில், அரசியலமைப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டது.
  • என். கோபாலசாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்ஷி, சையது முகமது சாதுல்லா, என். மாதவராவ் ஆகியோர் வரைவுக் குழுவின் உறுப்பினர்களாவர்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.