ஐசோடோப்புகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஐசோடோப்புகள்

 •  ஒத்த அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்களையும் உடைய ஒரு தனிமத்தின் வெவ்வேறு அணுக்கள் ஐசோடோப்புகள் எனப்படும்.
 • ஒரேமாதிரி அணு எண் மதிப்பையும் வேறுப்பட்ட நிறை எண் மதிப்புகளையும் கொண்ட ஒரே தனிமத்தின் அணுக்கள் ஐசோடோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
 • ஒரு தனிமத்தின் வேதிப் பண்புகள் அனைத்தும் அதிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கையையும் அமைப்பையும் பொருத்து அமைகின்றன. அதனால் நியூட்ரான்கள் அதிகமாக இருப்பதால் வேதி வினைகள் பாதிக்கப்படமாட்டாது.  எனவே, ஐசோடோப்புகள் நிறையிலும் அணுவின் உட்கருப் பண்புகளிலும் (Nuclar Properities) மட்டுமே வேறுபடுகின்றன
 • புரோட்டியம், டியூட்ரியம் மற்றும் டிரிட்டியம் ஆகியவை ஹைட்ரஜனின் ஐசோடோப்புகள் ஆகும். இவற்றின் நிறை எண்கள் முறையே 1,2,3 ஆகும்.
 • புரோட்டியத்தில் நியூட்ரான் இல்லை, டியூட்டிரியத்தில் ஒரு நியூட்ரானும், டிரிட்டியத்தில் இரண்டு நியூட்ரான்களும் அவற்றின் உட்கருக்களில் உள்ளன.
 • ஐசோடோப்புகளின் வேதியியல் பண்புகள் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இயற்பியல் பண்புகள் மாறுபட்டுக் காணப்படும். இதற்குக் காரணம் அவற்றில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபடுவதே ஆகும்.
 • கோபால்ட்டின் ஒரு ஐசோடோப்பு புற்று நோயைக் குணப்படுத்தவும், யுரேனியத்தின் ஒரு ஐசோடோப்பு, அணுக்கரு உலையில் மின்னாற்றல் உற்பத்திக்கும் பயன்படுகிறது.

ஐசோடோப்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அவை:

 • நிலையான ஐசோடோப்புகள் : எ.கா. H1, H2, O16, O17, Na23, C13.
 • கதிரியக்க ஐசோடோப்புகள் : எ.கா. H3, O18, P32, S3.
 • இவைகள் கதிரியக்கத் தன்மையுடையவை. அதனால் ஆல்பா பீட்டா, காமா கதிர்களாக மெதுவாகக் கதிரியக்கச் சிதைவடைகின்றன.
 • ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் ஒரேமாதிரி வேதியியல் பண்புகளைப் பெற்றுள்ளன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]