கரிம வேதியியலில் மாற்றியம்

கரிம வேதியியலில் மாற்றியம்

மாற்றியம்                                                               

  • ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும் வெவ்வேறு வடிவமைப்பையும் மற்றும் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளில் வேறுபடும் சேர்மங்கள் “ மாற்றிகள்” எனப்படும்.

அமைப்பு மாற்றியம்                                             

  • ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்கள் அமைக்கப்பட்டிருக்கும் முறையில் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் “ அமைப்பு மாற்றியம்” எனப்படும்.

புறவெளி மாற்றியம்                                             

  • ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைக்கப்பட்டிருப்பதில் வேறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் “புறவெளி மாற்றியம்” எனப்படும்.

வடிவ மாற்றியம்:

  • இரட்டைப் பிணைப்பால் பிணைக்கப்பட்ட கார்பன் அணுக்களுடன் இணைந்துள்ள அணுக்கள் அல்லது தொகுதிகள் புறவெளியில் அமைக்கப்படும் முறையில் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியம் “ வடிவ மாற்றியம்” எனப்படும்.

ஒளி சுழற்சி மாற்றியம்                                                

  • ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், புறவெளியில் அணுக்கள் அல்லது தொகுதிகள் அமைக்கப்பட்டிருப்பதில் வேறுபாட்டையும் ஏற்படுத்தும் மாற்றியம் “ ஒளி சுழற்சி மாற்றியம்” எனப்படும்.

சிஸ் மாற்றியம்                                                 

  • ஒத்த தொகுதிகள் எதிரெதிர் திசையில் அமைந்திருக்கும் மாற்றியம்.

 

 

E – Z அமைப்பு                                                     

  • ஒரே தரமுள்ள தொகுதிகள் இரு ஒலிஃ பின் கார்பன் அணுக்களுடனும், ஒரே திசையை நோக்கிய வண்ணம் பிணைக்கப்பட்டிருந்தால் இந்த மாற்றியம் “Z” எனும் குறியால் காட்டப்படுகிறது. (Zusammen –பொருள் ஒன்றாகச் சேர்ந்திருத்தல்)
  • வெவ்வேறு தரமுள்ள தொகுதிகள் ஒரே திசையை நோக்கிய வண்ணம் பிணைக்கப்பட்டிருந்தால் இந்த மாற்றியம் “ E ” எனும் குறியால் காட்டப்படுகிறது.(Entgegen- எதிராக இருத்தல் என்று பொருள்.).

வச அமைப்புகள்                                                        

  • கார்பன் –கார்பன் ஒற்றைப் பிணைப்பைப் பொறுத்த சார்பு சுழற்சியின் காரணமாக உண்டாகும் வெவ்வேறு வடிவங்களை ”வச அமைப்புகள்””“ என்கிறோம்.

ஒளி சுழற்றும் பண்பு                                            

  • கைரல் மூலக்கூறுகள் தள முனைவுற்ற ஒளியை கடிகார முள் எதிர் திசையிலோ சுழற்றும் பண்பு ஒளி சுழற்றும் பண்பு எனப்படும்.

கைரல் தன்மை                                                 

  • கைரல் தன்மை என்பது “இடவழக்கை தன்மை” அல்லது “ மேற்பொருந்தாத் தன்மையாகும்”.

சீர்மையற்ற கார்பன் அணு                               

  • நான்கு வெவ்வேறு அணு (அல்லது) தொகுதிகளுடன் பிணைக்கப்பட்ட கார்பன் அணு “சீர்மை தன்மையற்ற அணு” என்கிறோம்.

வலஞ்சுழற்சி                                                    

  • ஒளி சுழற்சி கடிகார முள் எதிர் திசையில் இருக்குமேயானால், வலஞ்சுழற்சி எனப்படும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.