அயனிப் பிணைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அயனிப் பிணைப்பு:

  • நேர்மின் தனிமங்களுக்கும் எதிர்மின் தனிமங்களுக்கும் இடையே ஏற்படும் இவ்வகை வேதிப் பிணைப்பு, அயனிப்பிணைப்பு எனப்படும்.
  • எலக்ட்ரான் பரிமாற்றத்தின் விளைவாக உருவாகும் நேர் அயனியும் எதிர் அயனியும் ஒன்றுக்கொன்று நிலை மின்னியல் கவர்ச்சி விசையால் இணைவதன் மூலம் உருவாகும் பிணைப்பு அயனிப் பிணைப்பு எனப்படும்.
  • அயனிப் பிணைப்பு உருவாக A அணு 1,2 அல்லது 3 இணைதிற எலக்ட்ரான்களையும், B அணு 5,6 அல்லது 7 இணைதிற எலக்ட்ரான்களையும் பெற்றிருக்க வேண்டும்.
  • பங்கீட்டுக்கு உள்ளான இரு எலக்ட்ரான்களால் ஏற்படும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படும். இந்தப் பிணைப்பு, எலக்ட்ரான் இணபிணைப்பு என்றும் அழைக்கப்படும்.
  • அயனிச் சேர்மங்கள், அறை வெப்ப நிலையில் திண்ம நிலையில் உள்ளன.
  • அயனிச் சேர்மங்களின் உருகுநிலை அதிகம் நொறுங்கும் தன்மையைப் பெற்றிருக்கும் சில அயனிச் சேர்மங்கள் வெப்பம் தாங்கவல்ல பொருட்களாக உள்ளன.
  • அயனிப் படிகத்தை நீருடன் சேர்க்கும்போது கரைகிறது.
  • இவை திண்ம நிலையில் மின்சாரத்தைக் கடத்துவதில்லை ஆனல், உருகிய நிலையிலும் நீரில் கரைக்கப்படும்போதும் மின்சாரத்தைக் கடத்துகின்றன
  • ஒரு அணுவின் இணைதிறன் கூட்டிலிருந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள் மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிற்கு முற்றிலுமாக மாற்றப்படுவதால் அயனிப்பிணைப்பு உருவாகிறது.
  • அயனிப்பிணைப்பினால் உருவாகும் சேர்மங்கள் அயனிச் சேர்மங்கள் எனப்படும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]