Study Materials

பன்னாட்டு வாணிகம்

  • ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் பண்டங்கள் மற்றும் பணிகளின் பரிமாற்றங்கள் உள்நாட்டு வாணிகம் எனப்படும்.
  • மாறாக ஒரு நாட்டின் எல்லையைக் கடந்து பல நாடுகளுக்கிடையே நடைபெறும் வாணிகம் வெளிநாட்ட வாணிகம் அல்லது பன்னாட்டு வாணிகம் எனப்படும்.

பன்னாட்டு வாணிகத்தின் போக்கு:

மூன்று அடிப்படைகள் மூலமாக அறியலாம்;

  1. இறக்குமதி ஏற்றுமதிகளின் அளவு
  2. இறக்குமதி ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் தன்மை
  3. எந்த நாடுகளுடன் வாணிக உறவுகள்

அயல்நாட்டு வாணிபச் சமநிலை (Balance of Trade)

  • அயல்நாட்டு வாணிபச் சமநிலை என்பது “புலனாகும் பொருள்களின் வாணிபத்தை மட்டுமே” குறிப்பதாகும். புலனாகும் பொருள்கள் என்பது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அளவு, வாணிபம், தங்கம், வெள்ளி மற்றும் இதரப் பண்டங்கள் ஆகியவற்றைக் குறிப்பதாகும். புலனாகாத பொருள்கள் என்பது பணிகள் பரஸ்பரம் செலுத்தப்படுதல், அதாவது கடல் வாணிகம், காப்பீடு மற்றும் வங்கியியல் நிறுவனங்கள், வட்டி செலுத்துதல், பங்கு, (Dividend) சுற்றுலாப் பயணிகளின் செலவு மற்றும் இதை போன்ற பிறவற்றைக் குறிப்பதாகும். அயல்நாட்டு வாணிபச் சமநிலை என்பது ஒரு குறிப்பிட்ட ஆண்டின் 1 ஆண்டு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் புலனாகும் பொருள்களின் மதிப்பளவே ஆகும்.

 

 

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker