சர்வதேச அமைதி தினம் 2016

Image result for International Peace Day 2016

 

 • உலக நாடுகளில் அஹிம்சை மற்றும் சமாதானத்தை நிலைநாட்டி, தீவிரவாதம், போர் போன்ற தவறான செயல்களில் இருந்து விடுபட்டு உலக நாடுகளில் அமைதி நிலவ ஐநா சபையானது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அமைதி தினத்தை கடைப்பிடிக்கிறது. 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது செவ்வாய் கிழமை அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதி முதன்முதலில் சர்வதேச அமைதி தினம் அனுசரிக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய் கிழமையும், 2002 ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் சர்வதேச அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

அமைதியும் இந்தியாவும்…

 

 • உலக அரங்கில் அமைதியை தொடர்ந்து காத்து வருவதில் இந்தியாவிற்கு நிகர் இந்தியா தான். மற்ற நாடுகள் எல்லாம் சுதந்திர பெற போர் போன்ற தீவரவாத செயல்களில் ஈடுபட்ட போதே அஹிம்சை என்ற அமைதியின் வழியில் சுதந்திரம் பெற்ற நாடு இந்தியா. “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நிலை தான் இந்தியாவில் அமைதியை நிலைநாட்டி உலக அரங்கில் இந்தியாவின் தலை நிமிர்ந்து நின்று, அமைதியில் மற்ற நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது. 1956 – ஆம் ஆண்டு ஐநா சபையில் ஆயுத குறைப்புத் தீர்மானத்தை கொண்டு வந்த முதல் நாடு இந்தியா என்பதில் பெருமை கொள்வோம்.

 

அமைதிக்காக ஐந்து அம்ச கொள்கை:

 • 1955 ஆம் ஆண்டு நடைபெற்ற பாண்டுங் மாநாட்டில் உலக நாடுகளுக்கு இடையே அமைதியை நிலை நாட்ட பஞ்ச சீலம் என்ற கொள்கையை இந்தியாவின் பிரதமராக இருந்த நேரு அவர்கள் வெளியிட்டார்.
 • எந்த ஒரு நாடும் மற்ற நாடுகளை தாக்கி துன்புறுத்த கூடாது.
 • ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரத்தில் பிற நாடுகள் தலையிட கூடாது.
 • அனைத்து நாடுகளுக்கு மற்ற நாடுகளுடன் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டு நட்பு நாடுகளாக திகழ வேண்டும்.
 • பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மை போற்றி காக்க வேண்டும்.
 • ஒவ்வொரு நாடு மற்ற நாடுகளுடன் அமைதியான சகோதரத்துவ முறையில் இணங்கியிருக்க வேண்டும்.

 
அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்பும் இந்தியா:

 • கங்கை நீரை பகிர்ந்து கொள்வதில் இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையே ஏற்பட்ட பராக்கா அணை கட்டும் பிரச்சினையை அமைதியான முறையில் கையாண்டு இன்று வரை இந்தியாவானது வங்காளதேசத்திற்கு பல்வேறு உதவிகளை செய்தும், செய்துகொண்டும் உள்ளது. பல்வேறு சூழ்நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே பகை நீடித்து வந்தாலும், அங்கும் அமைதியை நிலைநாட்ட 1999 ஆம் ஆண்டு முதல் டெல்லியில் இருந்து லாகூர் வரை பேருந்துகள் இயக்கப்பட்டு பாகிஸ்தானை அமைதியான முறையில் சகோதர நாடக இன்று வரை இந்தியா கையாண்டு வருகிறது.
 • இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அவ்வப்போது எல்லை பிரச்சினை ஏற்பட்டாலும், இந்தியாவும் சீனாவும் பொருளாதார தேவைகளை நிறைவேற்றி கொள்ள அமைதியான முறையில் பல்வேறு ஒப்பந்தங்களை கடைபிடித்து அமைதியை நிலைநாட்டியது. இலங்கையுடன் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டபோது இந்தியாவானது திறமையாகவும் அமைதியான முறையிலும் கையாண்டு வெற்றி கண்டு உலக நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

 

உலக போரை தடுத்த இந்தியா:

 • எகிப்து அரசர் நாசர் சூயஸ் கால்வாயை 1956 ஆம் தேசிய மயமாக்கினார், இதனால் இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் பிரான்சு போன்ற நாடுகள் எகிப்து மீது படையெடுக்க முடிவு செய்தனர். ஆனால் இந்தியாவின் தீவிர முயற்சியால் போர் தவிர்க்கபட்டது. இதன் மூலம் உலக அரங்கில் அமைதியை நிலை நாட்டியதில் இந்தியாவிற்கு முக்கிய பங்கு உண்டு. சைப்ரஸ் தீவில் உள்ள தீவிர கிறித்துவர்கள் மற்றும் துருக்கி முஸ்லிம்கள் இடையே தோன்றிய உள்நாட்டு போரை தடுக்க இந்தியாவை சேர்ந்த படைத்தளபதி திம்மையா தலைமையில் சைப்ரஸ் தீவிற்கு ஐநாவின் அமைதி படை சென்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு போரை நிறுத்தி, பல்லாயிரக்கணக்கான மக்கள் காப்பற்றபட்டனர். 1960 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த காங்கோவில் உள் நாட்டு போர் நடந்தது. போரை நிறுத்தி அமைதியை காக்க K.A.S. ராஜா தலைமையில் அமைதி படை சென்று வெற்றி கண்டு உலக அரங்கில் இந்தியா அமைதியை விரும்பும் நாடு என மீண்டும் ஒரு முறை நிருபித்தது.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.