international agriculture day

அக்டோபர் 21 சர்தேச விவசாய தினம்.

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for international day of agriculture

 

 • உலகின் முதுகெலும்பாக திழழும் விவசாயிகளின் மேம்பாட்டை வலியுறுத்தி ஆண்டு தோறும் அக்டோபர் 21 சர்தேச விவசாய தினம் (World Day of Peasant Farm)

 

 • இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயிகள் எப்போதும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். பெரும்பாலான விவசாயிகள் தாங்களே தயாரிக்கும் விதைகளே பயன்படுத்தும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் வீரிய மிக்க விதைகளை விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்ய முடியாத நிலையில் ஏழ்மையில்தான் இருக்கிறார்கள். மேலும், அவர்கள் தண்ணீருக்கு மழையைத்தான் நம்பி இருக்க வேண்டிய நிலைத்தான் தொடர்கிறது.

 

 • நாட்டில் ஒரு ஹெக்டேருக்கு (2.5 ஏக்கர்) குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள் எனப்படுகின்றனர். இந்த 2.5 ஏக்கரை நம்பி சுமார் 5 முதல் 6 பேர் இருக்கிறார்கள். ஹெக்டேருக்கு சுமார் ஒரு டன் தானியங்கள் தான் விளையும் நிலை இருப்பதால் வறுமை தொடர் கதையாக இருக்கிறது. விளைச்சல் அளவு 2 டன்னாக அதிகரிக்கும்பட்சத்தில்தான் விவசாயிகளின் வாழ்வில் வளம் பிறகும்.

 

 • கடந்த 2007 ஆம் ஆண்டின்படி உலகிலுள்ள தொழிலாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இருந்தாலும் பண்ணை சார்ந்த விவசாயம் தொழில் மயமாக்கல் தொடங்கியதிலிருந்து படிப்படியாக குறைந்து வருகிறது. 2003 ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சேவைத் துறையானது உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்களை வேலைக்கு அமர்த்தும் பொருளாதாரத் துறையாக விவசாயத்தை கைப்பற்றிக்கொண்டது.

 

 • இந்திவாவில் வேளாண்மைத் துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 28% வழங்குகிறது. சேவைத் துறை மற்றும் தொழில் துறையும் முறையே 54% மற்றும் 18% பங்களிப்பை கொண்டுள்ளன.

 

 • இந்தியாவின் விவசாயத்துறை கடுமையான ஒரு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது என பிரபல வேளாண் விஞ்ஞானியும் விவசாயிகளுக்கான தேசிய ஆணையத்தின் தலைவருமான டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் சொல்லிருப்பது கவனத்தில் கொள்ளத் தக்கது.

 

 • டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கூறும் போது, ‘‘சிறு விவசாயிகள் தங்களது தொழிலை மேற்கொள்ள அதிக சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார்கள். நாட்டில் 50 சதவிகிதத்தினர் விவசாய தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனர். இது தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. விவசாயக் குடும்பங்களிலிருந்து படித்து முன்னுக்கு வரும் இளைஞர்கள் மீண்டும் விவசாயம் செய்ய வருவதில்லை. சிறு விவசாயிகளுக்கு விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும் இந்தப் பின்னடைவுக்கு முக்கிய காரணம்.’’ என்றார்.

 

 • இந்தியாவிலிருக்கும் விவசாய நிலங்களில் 40% நிலங்களுக்கே பயிர் செய்வதற்கு போதிய நீர் வசதிகள் கிடைக்கிறது. பருவநிலை மாற்றம் காரணமாக மழை வீச்சியில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகின்றன.

 

 • விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமான ஊதியத்துக்கான ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்படாத வரையில் இந்தப் பிரச்சினை தொடரவே செய்யும்.

 

 • விவசாயம் செய்வதை விட நிலங்களை விற்றுவிட்டால் அந்தப் பணத்துக்கு கிடைக்கும் வட்டி விவசாய வருமானத்தை விட கூடுதலாக இருக்கும் என்கிற எண்ணம் தற்போது விவசாயிகளிடம் மேலோங்கி வருவதை பார்க்க முடிகிறது.

 

 • ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து எவ்வளவு விவசாயம் செய்ய முடியும் என்பதை விட அந்த நிலத்திலிருந்து எவ்வளவு வருமானம் வரும் எனும் நோக்கில் மீண்டும் ஒரு விவசாயப் புரட்சி தேவை..!

 

 • மத்திய அரசுத் தரப்பு புள்ளி விவரப்படி, இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திலும் மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 1993- லிருந்து 2006 வரையில் 1,50,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஊடகங்களின் தகவல்களின்படி விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மூன்று லட்சம்.

 

 • 2006 -லிருந்து 2009 வரையில் மேலும் பல்லாயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

 

 • கடந்த 40 ஆண்டுகளில் வேளாண்மை உற்பத்தியும் உற்பத்தித் திறனும் பன்மடங்கு உயர்ந்தும் கூட விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது ஏன்? கடந்த 40 ஆண்டுகளாக உணவு உற்பத்தியை உயர்த்த வேண்டும் என்ற இலக்கு உலகளாவியதாக இருந்தது.

 

 • இந்தியாவிலும் கிழக்காசிய நாடுகளிலும் அரிசி முக்கிய உணவு. அமெரிக்காவில் அரிசியின் உற்பத்தித் திறன் ஹெக்டேருக்கு 7 டன். இந்தியாவில் இது 3 டன். ஆகவே இந்திய விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமானால் அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவிலும் ஹெக்டேருக்கு 7 டன் அரிசி விளைவிக்க வேண்டும். இந்த அளவில் இந்திய விவசாயிகள் அரிசி உற்பத்தி செய்தால் போதும். நல்ல லாபம் வரும்.

 

 • அமெரிக்காவில் விவசாயத்துக்கு அதிக அளவில் மானியம் வழங்கப்படுகிறது. அது போல் இந்தியாவிலும் வழங்கபட்டால்தான் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]