Deal Score0

tamil-grammar

  1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

பொருள்: அன்பு கலந்து வஞ்சம் அற்றவையாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

 

  1. அகனமர்ந்து ஈதன் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்

பொருள்: உள்ளம் விரும்பி ஒருவருக்குக் கொடுத்து உதவுவது நல்லது முகம் மலர்ந்து ஒருவரைப் பார்த்து இனிய சொற்களைக் கூறுதல் அதைவிடவும் நல்லது.

 

  1. முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொ னதே அறம்

பொருள்: முகத்தால் விரும்பி இனிமையுடன் நோக்கி உள்ளம் கலந்த இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

 

  1. துன்புறூஉம் துவ்வாமை இல்லாக்கும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

பொருள்: எல்லாரிடமும் இன்பம் தரும் இனிய சொற்களைப் பேசுவோரிடம், துன்பம் தரும் வறுமை அணுகாது.

 

  1. பணிவுடையன் இன்சொலான் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றும் பிற

பொருள்: பணிவுடையவனாகவும், இன்சொல் பேசுபவனாகவும் விளங்குவதே ஒருவனுக்கு உண்மையான அணிகலனாகும்.  உடல் அழகுக்காக அணியும் பிற எல்லாம் உண்மையான அணிகலன் ஆகா.

 

Click Here To Get More Details