Information About the Indian Parliament

இந்திய பாராளுமன்றம் பற்றிய தகவல்கள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய பாராளுமன்றம் பற்றிய தகவல்கள்

Information About the Indian Parliament

  • இந்திய பாராளுமன்றம் – மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது
  • குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு – பாராளுமன்றம்
  • புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு – பாராளுமன்றம்
  • இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் – சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
  • நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் – 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை
  • மக்களவையின் தலைவர் – அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.
  • இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை 32 விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
  • பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிக் குறிப்பிடும் ஷரத்து – ஷரத்து 102
  • இந்திய அரசியலமைப்பின் தந்தை – டாக்டர் அம்பேத்கார்
  • அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது – அடிப்படை உரிமை
  • இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது – முகவுரை
  • இந்திய அரசாங்க முறையானது – பாராளுமன்ற ஆட்சி முறை
  • மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார் வசமுள்ளது – பாராளுமன்றம்
  • பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையான நிதிக்குழு – பொதுக் கணக்குக் குழு
  • பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை – 24
  • பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை – 45
  • பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை – 21
  • பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் – குளிர்கால கூட்டத்தொடர்
  • பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர் – பட்ஜெட் கூட்டத்தொடர்
  • பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் – 6 மாதங்கள்
  • பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர் – துணை சபாநாயகர்
  • இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திராகாந்தி
  • லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்
  • அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை – இராஜ்யசபை
  • மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை – இராஜ்யசபை
  • பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் – சபாநாயகர்
  • பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் – 2 முறை
  • எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர் – இந்திய அட்டர்னி ஜெனரல்
  • பாராளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை – 14
  • மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன – மக்கள் தொகை அடிப்படையில்
  • நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம் – மத்திய அமைச்சரவை
  • காபினெட்டின் தலைவர் – பிரதமர்
  • மத்திய அமைச்சரவையின் தலைவர் – பிரதமர்
  • காபினெட் என்பது – மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்
  • மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும் – 6 மாதங்கள் வரை
  • அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது – மூன்று
  • அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது – லோக்சபைக்கு
  • ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் – சபாநாயகர்.
  • நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் – லோக்சபை
  • மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை – லோக்சபை(மக்களவை)
  • லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர் – லோக் சபை உறுப்பினர்கள்
  • தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும் – 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)
  • பண மசோதா என்று வரையறை செய்பவர் – சபாநாயகர்
  • பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும் – லோக்சபை
  • பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு – 14 நாட்கள்
  • லோக்சபையின் பதவிக்காலம் – 5 ஆண்டுகள்
  • லோக்சபையின் பதவிக்காலம் எந்த சமயத்தின்போது நீட்டிக்கப்படலாம் – தேசிய அவசரகால நெருக்கடி நிலையின்போது
  • லோக்சபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை – 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)
  • தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை – 545 (530+13+2)
  • 545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் – 2025
  • லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு – 25
  • லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
  • இராஜ்யசபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு – 30
  • இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் – லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள்
  • இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் – தில்லி மற்றும் பாண்டிச்சேரி
  • இராஜ்யசபையின் பதவிக்காலம் – நிரந்தரமானது
  • இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் – 6 ஆண்டுகள்
  • தற்போது நடைமுறையில் உள்ள இரைஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை – 245 (233+12)
  • மாநில சட்டப்பேரவை கொண்ட இரு யூனியன் பிரதேசங்கள் – தில்லி மற்றும் பாண்டிச்சேரி
  • ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை – 3
  • ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை – 3
  • இருசபைக் கூட்டுக் கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து – ஷரத்து 108
  • பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து – ஷரத்து 110
  • பட்ஜெட் என்பது – பண மசோதா
  • மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை – 30
  • மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையை சார்ந்தவர்கள்.
  • மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் – 1 ஆண்டு
  • பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 22 உறுப்பினர்கள்
  • பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை – 15
  • பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை – 7
  • இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள் – பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு
  • அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு – மதிப்பீட்டுக் குழு
  • மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு – பொதுக் கணக்கு குழு
  • நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் – 50
  • இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு – பொதுக் கணக்குக் குழு
  • பொதுவாக கேள்வி நேரம் என்பது – காலை 11 முதல் 12 வரை
  • பூஜ்ய நேரம் என்பது – 12 முதல் 1 மணி வரை
  • சபையின் முதல் ஒரு மணி நேரமே – கேள்வி நேரம்
  • நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும் – லோக்சபை
  • லோக்சபையின் தலைவரா செயல்படுபவர் – சபாநாயகர்
  • லோக்சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர் – சபாநாயகர்
  • லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் – பிரதமர்
  • மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன – மக்கள் தொகை அடிப்படையில்
  • லோக்சபையின் முதல் சபாநாயகர் – ஜி.வி.மாவலங்கார்
  • ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது – 1935ம் ஆண்டுச் சட்டம்
  • 1995ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் – ஃபாசல் அலி
  • நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை – வாக்குரிமை (பாராளுமன்ற செயல்பாடுகளில் வாக்களிக்க இயலாது)
  • காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.
  • அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு – ஜப்பான்
  • 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பது – 11வது அடிப்படை கடமை
  • ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு – ஷரத்து 356
  • இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் – இந்திய அட்டர்னி ஜெனரல்
  • இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஒய்வுக்கால வயது – 65 (அல்லது 6 ஆண்டுகள்)
  • இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன் – இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்
  • இந்திய பொதுப்பணத்தின் பாதுகாவலன் – இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலர்
  • மைய அரசில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் – மொரார்ஜி தேசாய்
  • இந்திய அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் – மக்கள்
  • இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்தி்ருக்கிறது – கனடா
  • கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம் – அதிகார பங்கீடு
  • இந்தியாவில் நடைமுறையில் உள்ள குடியுரிமை – ஒற்றைக் குடியுரிமை.