மஞ்சரி

மஞ்சரி (Inflorescence):

 • மலர்களின் தொகுப்பே மஞ்சரி எனப்படும்.
 • மிகவும் எளிமையான மஞ்சரி வகை. இதன் மைய அச்சு வரம்பற்ற வளர்ச்சி உடையது. இதன் மீது காம்புடைய பல மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் அமைந்துள்ளன இதற்கு தனி ரெசீம் (Simple raceme) என்று பெயர்.
 • மஞ்சரியின் மஞ்சரி அச்சு கிடைத்துள்ளது.
 • ஒவ்வொரு கிளையிலும் மலர்கள் தனி ரெசீம் போல நுனி நோக்கி வரிசையில் உள்ளன. இதற்கு கூட்டு ரெசீம் (Complex compound raceme) என்று பெயர்.
 • மஞ்சரி ரெசீம் போன்று நீண்ட தண்டு உடையது. அதனால் மலர்கள் காம்பற்றவை. அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் காணப்படும் இதற்கு கதிர் மஞ்சரி (Ray inflorescene) என்று பெயர்.
 • மஞ்சரியின் அடிப்பக்கத்தில் இரு பூவடிச் செதில்கள் காணப்படும். இதற்கு குளும் (Glume) என்று அழைக்கப்படும்.
 • மஞ்சரி முழுவதும் மடல் எனப்படும் பெரிய பூவடிச் செதிலால் மூடி பாதுகாக்கப்பட்டிருக்கும். மஞ்சரி தண்டின் கீழ்பகுதியில் பெண் மலர்களும், அதற்கு மேல் வளமற்ற மலர்களும், ஆண் மலர்களும் உள்ளன. இதற்கு மடல் கதிர் மஞ்சரி என்று பெயர்.
 • சதைப்பற்று மிக்க மஞ்சரித்தண்டு கிளைத்து காணப்படும் அதன் மீது காம்பற்ற மலர்கள் அமைந்திருக்கும் ஸ்பேத் எனப்படும் தடித்த படகு போன்ற பூவடி செதில் மஞ்சரி முழுவதையும் மூடி பாதுகாக்கும் இதற்கு கூட்டு மடல் மஞ்சரி என்று பெயர்.
 • மஞ்சரியின் மைய அச்சு ரெசீம் போன்ற நீண்டு வளர்வதில்லை பூக்காம்புகள் வெவ்வேறு நீளமுடையவை முதிர்ந்த மலர்கள் நீண்ட காம்புகளையும், இளம் மலர்கள் குட்டையான காம்புகளையும் கொண்டிருக்கும் மலர்கள் அனைத்தும் ஒரே மட்டத்தில் இருக்கும் இதற்கு காரிம்ப் (Corymb) என்று பெயர்.
 • மஞ்சரியில் மையத்தண்டு தனித்தே அல்லது கிளைத்தோ காணப்படலாம். ஆனால் மஞ்சரித்தண்டின் செங்குத்தான வளர்ச்சி திடீரென தடை செய்யப்பட்டு நுனியில் கொத்தான பூவடிச் செதில்கள் தோன்றுகின்றன. இதற்கு வட்டப் பூவடிச் செதில்கள் என்று பெயர்.
 • கோணங்களிலிருந்தும், ஒரே நீளமுள்ள காம்புடைய மலர்கள் அடி முதல் நுனி நோக்கிய வரிசையில் தோன்றுகின்றன. மலர்கள் அனைத்தும் ஒரே மட்டத்தில் அமைந்திருக்கும் இதற்கு அம்பெல் (Umbel) என்று பெயர்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.