சிந்து சமவெளி நாகரிகம்

  • சிந்து சமவெளி நாகரிகம் செம்புக் காலத்தைச் சார்ந்ததாகும். சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.
  • 1921 ம் ஆண்டு அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இந்தியாவின் முதுபெரும் நகரம் இருந்ததைக் கண்டறிந்தனர்.
  • சர் ஜான் மார்ஷல் தன் குழுவுடன் மொகஞ்சதாரோவில் பல இடங்களில் ஆராய்ச்சி செய்தார். 1921 ல் ஹரப்பா என்னுமிடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது இந்த சான்றுகள் கிடைத்ததால் இது ஹரப்பா நாகரீகம் எனப்படுகிறது.
  • சர் ஜான் மார்சல் மொகஞ்சதாரோவின் காலத்தை கி.மு. 3250 – கி.மு. 2750 என மதிப்பிட்டார்.
  • ஹரப்பா என்ற சொல்லுக்கு புதையுண்ட நகரம் என்று பொருள். சுமார் 4,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்நாகரிகம் இந்தியாவில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதைப் போன்று மொகஞ்சதாரோ, சான்குதாரோ, கலிபங்கன், லோத்தல் போன்ற வேறுபல இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டன.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.