இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத்

Image result for மௌலானா அபுல்கலாம் ஆசாத்

மௌலானா அபுல்கலாம் ஆசாத்

  • இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் 1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி சவுதி அரேபியாவிலுள்ள மக்காவில் பிறந்தார். ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.
  • இவர் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினம் ஆக கொண்டாடப்படுகிறது. இவர் 1947 முதல் 1958ஆம் ஆண்டுவரை கல்வி அமைச்சராக இருந்தார்.
  • கல்வித் தேவைகளை சரியான முறையில் நிறைவு செய்ய உறுதி பூண்ட இவர் அதற்கான அடித்தளத்தை அமைத்தார். இந்திய தொழில் நுட்ப கழகத்தை (IIT) 1951இல் உருவாக்கினார். பல்கலைக்கழக மானியக்குழு (UGC) என்ற அமைப்பை 1953இல் வடிவமைத்தார்.
  • இவர் சாகித்திய அகாடமியை உருவாக்க வழிவகுத்தார். நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்பப் பள்ளியில் உள்ளது என்றார். இவர் குர் ஆனுக்கு விளக்கவுரை எழுதினார்.
  • இந்தியாவை கல்வியில் முன்னேறிய நாடாக மாற்ற வேண்டும் எனக் கனவு கண்டார். இவரது சாதனைகளை நினைவு கூறுவதற்காகவே இவரது பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • உயிரோடு இருந்த போது இவருக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அவர் அப்பொழுது பாரத ரத்னா விருதின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தமையால் விருது பெற மறுத்துவிட்டார். 1992ஆம் ஆண்டு இவரின் மறைவிற்கு பிறகு இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
  • இவர் தன்னுடைய 69வது வயதில் (1958) மறைந்தார். இவரது நினைவாக தபால் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.

நினைவுறுத்தும் நாள்

  • இந்த நாள் போரில் தனது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும், மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். இத்தினத்தில் பொப்பி மலர்களை (கசகசா பூ) நினைவுக் குறியீடாக அணிந்துக் கொள்வார்கள்.
  • நினைவுறுத்தும் நாள் நவம்பர் 11ஆம் தேதி பொதுநலவாயம் (Commonwealth of Nations) உறுப்பினர்களினால் கொண்டாடப்படுகிறது.
  • பொப்பிச் செடிகள், போர் நடைபெற்ற பெல்ஜியம் நாட்டில் உள்ள பிளாண்டர் எனும் இடத்தில் அதிகமாக காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் வீரர்கள் சிந்திய இரத்தத்தின் நிறத்தை நினைவுப்படுத்துகிறது.
  • முதலாம் உலகப் போர் முடிவில் பொதுநலவாய நாட்டு கூட்டுப்படைக்கும், ஜெர்மானியருக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. இப்போர் நிறுத்தப்பட்டதையும், போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் 1918ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது.
  • 1889ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
  • 1930ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
  • 1966 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி நாசா ஜெமினி 12 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது
STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.