விடுதலைக்குப் பின் இந்திய அரசியல் கட்சிகள்

Deal Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

விடுதலைக்குப் பின் இந்திய அரசியல் கட்சிகள்

Indian Political Party After Independence

  • விடுதலைக்குப் பின் இந்திய அரசியல் கட்சிகள்
  • மாநிலக் கட்சிகள்

விடுதலைக்குப் பின் இந்திய அரசியல் கட்சிகள்

  • மார்ச் 12, 2014 நிலவரத்தின்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட மொத்த கட்சிகள் 1,616 ஆகும். அவற்றுள் 6 கட்சிகள் தேசியக் கட்சிகளாகவும், 47 கட்சிகள் மாநிலக் கட்சிகளாகவும் தேர்தல் ஆணையத்தால் ஆங்கீகாரம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,563 கட்சிகளும் பதிவு செய்யப்பட்டன ஆனால், அங்கீகாரமற்ற கட்சிகளாகும்
  • ஒரு கட்சி தேசியக் கட்சியாக அங்கீகாரம் பெறுவதற்கு பின்வரும் மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை பூர்த்தி செய்ய வேண்டும்
  • ஒரு கட்சி மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து குறைந்த பட்சம் இரண்டு சதவிகித மக்களவைத் தொகுதிகளை மொத்தம் 11 தொகுதிகள் வென்றிருக்க வேண்டும்
  • மக்களவைக்கான பொதுத் தேர்தலில் அல்லது சட்டமன்றத் தேர்தலில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் இருந்து 6 சதவிகித வாக்குகளைப் பெற்றிருப்பதோடு 4 மக்களவைத் தொகுதிகளில் வென்றிருக்க வேண்டும்
  • ஒரு கட்சி நான்கு அல்லது அதற்க மேற்பட்ட மாநிலங்களில் மாநிலக் கட்சியமாக அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்
  • இந்த தகுதியை அங்கீகாரம் பெற்ற கட்சி தொடர்ந்து வரும் ஒவ்வொரு தேர்தலிலும் பூர்த்திசெய்ய வேண்டும். 16 வது மக்களவைத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியாவிலேயே அதிக இடங்களைப் பெற்ற (37 இடங்கள்) மூன்றாவது பெரிய கட்சியாகத் திகழ்ந்தபோதிலும், மேற்கண்ட வரையறைகள் எதையும் நிறைவுசெய்ய இயலாததால் அது மாநிலக் கட்சியாகவே கருதப்படுகிறது இந்தியாவில் தற்போதுள்ள ஆறு தேசியக் கட்சிகளும், அவை தற்போது மக்களவையில் இடம் பெற்றுள்ள இடங்களும் பின்வருமாறு.

 

Click Here to Download