இந்திய தேசிய காங்கிரஸ்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய தேசிய காங்கிரஸ்

Indian National Congres 

 • இந்திய தேசிய காங்கிரஸ்
 • இந்திய தேசிய காங்கிரசின் நோக்கங்கள்
 • காங்கிரசின் சாதனைகள்
 • சூரத் பிளவு
 • இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடங்கள் மற்றும் அதன் தலைவர்கள்
 • காங்கிரஸ் மாநாடு – முக்கிய குறிப்புகள்

இந்திய தேசிய காங்கிரஸ்

 • 1885 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஆங்கில அதிகாரியான ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்பவரது ஆலோசனையின் பேரில் இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது.
 • உமேஷ் சந்திரபானர்ஜி ஆலன் ஆக்டேவியன் ஹியூமை காங்கிரசின் தந்தை என்று வர்ணித்துள்ளார்.
 • இந்திய தேசிய யூனியன் என்று இருந்த பெயர் தாதாபாய் நௌரோஜி அவர்களின் யோசனைப்படி இந்திய தேசிய காங்கிரஸ் என்று மாற்றப்பட்டது.
 • மும்பையில் நடைபெற்ற காங்கிரசின் முதல் கூட்டத்திற்குப் உமேஷ்சந்திர பானர்ஜி தலைமை வகித்தார்.
 • முதல் காங்கிரஸ் கூட்டத்தில் 72 பேர் கலந்துகொண்டனர் இவர்களை பிரேவ் 72 என்று அழைப்பர்
 • முதல் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு அப்போதைய வைசிராய் டப்ரின் பிரபு விருந்து அளித்தார்.
 • தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத், பானர்ஜி, மதன்மோகன் மாளவியா, கோகலே, பெரோஷ்ஷாமேத்தா, ஆனந்த மோகன் போஸ், ஜி. சுப்ரமணிய அய்யர் போன்ற பல தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தாதாபாய் நௌரோஜி

 • 1866 தாதாபாய் நௌரோஜி லண்டனில் இந்தியப் பிரச்சனையைப் பற்றி விவாதிக்கவும், பிரிட்டிஷ் பொது மக்களிடையே இந்திய நலன் குறித்த செல்வாக்கை உருவாக்கவும் கிழக்கிந்திய சங்கம் ஒன்றை நிறுவினார். பின்னர், இவ்வமைப்பின் கிளைகளை இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஏற்படுத்தினார். 1825 ஆம் ஆண்டு பிறந்த தாதாபாய் தனது வாழ்நாள் முழுவதும் தேசிய இயக்கத்துக்காக அர்ப்பணித்தார். இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அவர் அழைக்கப்பட்டார். இந்தியாவின் முதலாவது பொருளாதார சிந்தனையாளரும் அவரே இந்தியாவில் பிரிட்டிஷ் சுரண்டலும் அதன் செல்வத்தைக் கொள்ளை கொண்டு போனதுமே இந்தியாவின் வறுமைக்கு அடிப்படைக் காரணம் என அவர் பொருளாதாரம் குறித்த தனது கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார் இது வறட்சி கொள்கை எனப்பட்டது. இவர் எழுதிய இந்திய வறுமையும் பிரிட்டிஷீக்கு ஒவ்வாத ஆட்சியும் (Poverty & Unbritish rule in india) என்ற புத்தகம் புகழ் பெற்றது. இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன் முதலாக கணக்கிட்டவர். பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் என பல சிறப்புகளைப் பெற்றவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மூன்று தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அவர் கௌரவிக்கப்பட்டார்.
 • இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தின் முதல் தீர்மானத்தை முன்மொழிந்த சுப்ரமணிய ஐயர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்
 • பம்பாய் ராஜதானிகழகம், பூனா சர்வஜனிக்சபை, சென்னை மகாஜனசபை, இந்தியக் கழகம் போன்ற பல்வேறு மாகாண அமைப்புகள் காங்கிரசோடு நட்பு பாராட்டின.
 • 1886 ஆம் ஆண்டு சுரேந்திரநாத் பானர்ஜியின் தலைமையில் செயல்பட்ட இந்தியக்கழகம் காங்கிரசோடு இணைந்தது
 • இந்திய தேசிய காங்கிரசின் தோற்றம் குறித்த லாலா லஜபதிராய் அவர்களின் தடுக்கிதழ் கோட்பாடு மிகவும் பிரபலமானது. இந்த கோட்பாடு ஆங்கில ஆட்சிக்கு எதிரான படித்த இந்தியர்களின் கருத்துகளுக்கு ஒரு வடிகாலாகவே ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ் அதிகாரியான ஏ.ஒ.ஹியூம் இந்திய தேசிய காங்கிரசைத் தொடங்கினார் என்று விளக்குகிறது.
 • இந்திய தேசிய காங்கிரசை எந்த இந்தியரும் தொடங்கியிருக்க முடியாது. தேசிய அளவிலான இத்தகைய இயக்கத்தை அமைக்க இந்தியர் யாரும் முன்வந்திருந்தால், இந்த அமைப்பு தோன்றுவதையே அதிகாரிகள் அனுமதித்திருக்கமாட்டார்கள் என கோபால கிருஷ்ண கோகலே 1913 ல் கூறினார்.
 • இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை நிதானமாகவும் சற்று தயக்கத்துடனும் தொடங்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்டம் எனவும் கூறுவர்
 • இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்திற்கு முன் நடந்த இந்திய தேசிய மாநாட்டை நடத்தியவர் சுரேந்திரநாத் பானர்ஜி

 

Click Here to Download