சுந்தரலிங்கம்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சுந்தரலிங்கம்

Sundaralingam

சுந்தரலிங்கம்

 • தளபதி சுந்தரலிங்கம் தமிழ் நாடுதூத்துக்குடி மாவட்டம் கவர்னகிரி என்னும் ஊரில் பிறந்த விடுதலை போராட்ட வீரர்.
 •  இவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் வீரராகச் சேர்ந்து பின்னாளில் துணைத் தளபதியாகவும், தளபதியாகவும் மாறினார்.
 •  கும்பினி (ஆங்கிலேயருக்கு) எதிராக நடந்த போரில் வெள்ளையன்கந்தன் பகடைமுத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றோர்களுடன் பங்கு பெற்று இறந்தவர்.
 •  தமிழக அரசு இவர் பிறந்த ஊரில் நினைவு சின்னமும், அழகு வளையமும் எடுத்துள்ளது.
 •  மேலும் நினைவாக முதுகுளத்தூரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது.
 •  சுந்தரலிங்கம் தேவேந்திரர் இனத்தைச் சேர்ந்தவர்.
 •  1997 இல் இவரது நினைவாக ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு தமிழக அரசு பெயர் சூட்டியது.
 •  இதனை முக்குலத்தோர்கள் ஏற்க மறுத்ததால், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் ஏற்பட்டது.
 •   இதனால் தமிழ்நாடு மாவட்டங்கள், போக்குவத்துக் கழகங்கள் ஆகியவற்றுக்கு இடப்பட்டிருந்த அனைத்து நபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டன.

வரலாறு

முதன்மைக் கட்டுரை: கட்டபொம்மன்

 •  வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டு பல ஆண்டுகள் கழிந்து அவருடன் போரில் பங்கு பெற்றவர்களை பற்றி நாட்டுபுற பாடல்களும்,கூத்துகளும் இயற்றப்பட்டன.
 •  இப்படியாக இயற்றப்பட்ட பாடல்களில், கூத்துகளில் தனது குமுகத்தை சேர்ந்தவரை பற்றி பெருமையாக இட்டுகட்டி கூறப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் விளம்புகின்றனர். 
 •  வானமாமலை இப்பகுதியில் வழங்கப்பட்ட நாட்டு புற பாடல்களை தொகுத்துள்ளார்.
 •  இதனின் ஊடாகவே இப்போரில் பங்கு பெற்ற சுந்தரலிங்கம், வெள்ளையன், கந்தன் பகடை, முத்தன் பகடை , கட்டன கருப்பணன் போன்றவர்களை அறிய முடிகிறது.

சுந்தரலிங்கத்தின் பங்கு

 •  வெள்ளையர்களின் ஆவணப்படி கட்டபொம்மன் , ஊமைத்துரை, தானாதிபதி இவர்களை பற்றித்தான் அறியப்படுகிறது.
 •  மற்றவர்களின் வீரம் செறிந்த போராட்டங்கள் நாட்டுப்புற பாடல்கள் மூலம்தான் தெரியவருகிறது.
 •  கட்டபொம்மனின் படைத்தளபதி மாவீரன் சுந்தரலிங்கம் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமம் கெவிணகிரி. இங்கு ஒரு விவசாயிக்கு மகனாகப் பிறந்தவன்தான் சுந்தரலிங்கம்.
 •  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன்.
 •  சுந்தரலிங்கம் தனது ஊரில் உள்ள கண்மாயை (குளம்) பக்கத்து பாளையங்காரர்கள் மறிந்து கட்டும்பொழுது ஏற்படும் சண்டையில், மிக திறமையாக போரிடுவதால் அம்முயற்சி தடுக்கப்படுகிறது.
 •  இப்போரை அறிந்த கட்டபொம்மன், சுந்தரலிங்கத்திற்கு தனது படைபிரிவில் முக்கிய இடத்தை அளிக்கிறார். அவனது வீரத்தைக் கேள்விப்பட்ட கட்டபொம்மன் தனது ஒற்றர் படைக்குத் தளபதியாக்கினான்.
 •  விரைவில் அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக உயர்ந்தான்.
 •  சுந்தரலிங்கத்தின் பொறுப்பில்தான் கட்டபொம்மனின் தானியக்கிடங்கும், வெடிமருந்துக் கிடங்கும் இருந்தன.
 •  கட்டபொம்மனுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் முட்டல், உரசல் உருவானபோது வெள்ளையத்தேவனும், சுந்தரலிங்கமும் கட்டபொம்மனுக்கு பக்கபலமாக விளங்கினர்.
 •  கட்டபொம்மனை பல நாட்கள் அலைக்கழிய வைத்து ராமநாதபுரம் அரண்மனையில் ஜாக்சன் துரை சந்தித்தபோது சுந்தரலிங்கமும் உடனிருந்தான்.
 •  அந்த சந்திப்பு பின்பு பெரும் சண்டையாக மாறியபோது சுந்தரலிங்கத்தின் வாளுக்கு பல வெள்ளைச் சிப்பாய்கள் மாண்டனர்.

 

Click Here to Download