இந்திய அரசியல் (Indian History) - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

இந்திய அரசியல் (Indian History)

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • இப்பாடத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் சட்ட திருத்தங்கள், ஐந்தாண்டுத் திட்டங்கள், மக்களாட்சி, இந்தியப் பாதுகாப்பு முறைகள், இந்திய அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும். மத்திய, மாநில அரசுகளின் உறவுகள், அரசியல் பொருளாதார நிர்வாக உறவுகள், இந்திய தேர்தல் கமிஷன், தேர்தல் சீர்திருத்தங்கள், நேர்முக, மறைமுகத் தேர்தல்கள், நீதித்துறை, நீதிமன்றப் பணிகள், உயர்நீதி மன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் உள்ள வேறுபாடுகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 மற்றும் 226 பிரிவு விதிகள், பொதுநல வழக்கு போன்ற தகவல்களையும் சேகரித்துப் படிக்க வேண்டும்.

 

2016-08-12_16-44-21

 

 

  • தற்காலத் தேசிய நிகழ்வுகள் மற்றும் சமூக நலம் பயக்கும் தலைப்புகளிலும் செய்திகளைச் சேகரித்து படித்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, மனித உரிமைகள், பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலம், ஏழ்மை, பொதுவாழ்வில் ஊழல், உடல் நலம் போன்ற தலைப்புகளில் செய்திகளைச் சேகரித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

 

  • தீவிரவாதிகள் பிரச்சினை, மனித உரிமை மீறல், குழந்தைத் தொழிலாளர்களால் ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற முன்னேற்றம், தேசிய மக்கள்தொகைக் கொள்கை, தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவில் ஏற்படுத்திய விளைவுகள், தேசிய அமைப்புகள், தேசியக் குழுக்கள், மீனவர் பிரச்சினைகள், கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றியும் பொது அறிவுப் பாடத்தில் அதிக கேள்விகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

 

  •  இவைதவிர, கடந்த 2015ல் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம், நிதி ஆயோக் என்னும் அமைப்பு, மங்கள்யான் குழுவுக்கு விருது, கிரிக்கெட் சூதாட்டம், அக்னி-5 ஏவுகணை, லோக் அதாலத், பாரத பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், காவிரியின் மேகதாது, சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்புகள், அப்துல்கலாம் மறைவு போன்ற பல முக்கிய நிகழ்வுகளையும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.

இந்திய மற்றும் உலகப் புவியியல் (India and World Geography)

 

  • பொது அறிவுப் பாடத்தில் இந்திய மற்றும் உலக புவியியல் பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஏற்படும் பருவ மாற்றங்களால் இந்திய வேளாண்மையில் ஏற்படும் விளைவுகள், இந்திய தட்பவெப்ப நிலை ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் இடம்பெறும்.  மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் சில கேள்விகள் அமையலாம். பெண்கள் – ஆண்கள் விகிதம், பிறப்பு-இறப்பு விகிதம், மக்கள் தொகைப் பெருக்கம், தேசிய மக்கள் தொகைக் கொள்கை, இந்திய வேளாண்மை, பருவ கால மண்டலங்கள், பசுமைப் புரட்சி, மஞ்சள் புரட்சி, நீலப் புரட்சி, வெள்ளைப் புரட்சி, சமூக – வேளாண்மைக் காடுகள், நகரமயமாக்குதல், சுற்றுலா, நிலநடுக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது புவியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.

 

இந்தியா மற்றும் உலக உறவுகள்  (India and World Geography) 

 

  • இந்தப் பகுதியில், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்குமான உறவுகள், தொடர்புகள், உலக அளவிலான சட்டங்கள் பற்றி கேள்விகள் இடம்பெறும். யு.எஸ்.- ஆப்கான் போர், இந்திய – அமெரிக்க உறவுகள், தெற்கு ஆசிய நாடுகளின் உறவுகள், உலக நாடுகளின் உறவுகள் ஆகியவற்றைப் பற்றியும் தகவல்கள் சேகரித்துப் படிக்க வேண்டும்.

 

  • உலகளாவிய தீவிரவாதம், சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கும் வருமானம், உலகளாவிய வர்த்தகத்தின் மூலம் பன்னாட்டு உறவுகளின் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் வரலாம். இவை தவிர, ஈரான், ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மத்திய ஆசியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அணுக் கொள்கைகள், கடல் வணிகம், ஏற்றுமதியின் நிலை, இந்தியக் கடலில் இந்தியாவின் நிலை போன்றவற்றோடு WTP, ASEAN, SAARC, G-8, G-20, G-15