இந்திய விடுதலைப் போரில் பல்வேறு வகையான போராட்டங்கள்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

இந்திய விடுதலைப் போரில் பல்வேறு வகையான போராட்டங்கள்

Indian Freedom Struggle in the War

 • இந்திய விடுதலைப் போரில் பல்வேறு வகையான போராட்டங்கள்
 • விடுதலைப் போரில் காந்தி யுகம்
 • முழக்கங்கள்
 • சைமன் குழு எதிர்ப்பு போராட்டம்
 • இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் தொடங்கப்பட்ட

இந்திய விடுதலைப் போரில் பல்வேறு வகையான போராட்டங்கள்

 • இந்திய விடுதலைப் போராட்டத்தை மிதவாதிகள் காலம் (1885 முதல் 1905 வரை), தீவிரவாதிகள் காலம் (1903 முதல் 1920 வரை) காந்தியுகம் (1920 முதல் 1947 வரை) என மூன்றாக வகைப்படுத்துவர். இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டதும். அதன் மூலம் கோபாலகிருஷ்ண கோகலே, பெரோஷா மேத்தா போன்ற மிதவாதத் தலைவர்கள் ஆங்கில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து வெற்றி கண்டதம் இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் நிலையின் கூறுகளாகும். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் நிலையில் தாதாபாய் நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி போன்ற தலைவர்களும் முக்கிய பங்காற்றினர்.
 • இந்திய விடுதலைப் போராட்டத்தின் இரண்டாம் நிலையான தீவிரவாதிகள் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் போராட்டங்களையும் இந்த அலகில் பார்க்கலாம். மூன்றாம் நிலையான காந்தி யுகத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்டமறுப்பு இயக்கம் ஆகியவையும் இந்த அலகில் விளக்கப்பட்டுள்ளன

வங்கப்பிரிவினை 1905

 • ஆட்சியின் எளிமைக்கும், நிர்வாக வசதிக்கும் வங்காளத்தை, கிழக்கு வங்காளம் மற்றும் அசாமை இணைத்து ஒரு மாகாணமாகவும், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரை இணைத்து மற்றொரு மாகாணமாகவும் 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார்.
 • நிர்வாக வசதிக்காக வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது என்ற கர்சனின் கூற்றை இந்தியர்கள் நம்பவில்லை. இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரிப்பதற்காக செய்யப்பட்ட சூழ்ச்சி என்று கருதினர்.
 • வங்காளப் பிரிவினையை தீவிரவாதிகளும், மிதவாதிகளும் பிரித்தாளும் கொள்கையின் அறிமுகம் என்று கருதினர்

சுதேசி இயக்கம் 1905 – 06

 • 1905 ஆம் ஆண்டு பொருளாதாரப் புறக்கணிப்பு என்னும் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு வங்கப்பிரிவினை காரணமாயிற்று
 • சுதேசி என்பதன் பொருள் சொந்த நாடு என்பதாகும். சுதேசி இயக்கத்தின் படி நாட்டின் தொழில்கள் மேம்பாடு அடைவதை ஊக்குவித்து அயல்நாட்டுப் பொருள்கள் பயன்பாட்டைப் புறக்கணிப்பதாகும்
 • பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் இயற்றப்பட்ட வந்தே மாதரம் என்னும் தாய்நாட்டு பற்றுமிக்க முழக்கத்தை காங்கிரசார் எழுப்பினர்
 • தீவிர வன்முறையினாலும் எதிர்ப்பினாலும் 1911 ஆம் ஆண்டு வங்காளம் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது

 

Click Here to Download