Study Materials

இந்திய அரசியலமைப்பு குறிப்பு

  • இந்திய அரசியலமைப்பு (Constitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும்.
  • எழுதப்பட்ட சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சி மற்றும் ஒருமுகத்தன்மை கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது இந்திய அரசியலமைப்பாகும்.
  • அது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள்,மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது.
  • இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 94 திருத்தங்கள், 465  உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன.
  • இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது.
  • இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது.
  • முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது.

 

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker