இந்திய விமானங்களில் சாம்சங் கேலக்சி நோட் 7 செல்போன் பயன்படுத்த தடை! ஏன்?

 

  • இந்திய விமானங்களிலும் சாம்சங் கேலக்சி நோட் 7 செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

 

  • அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் தங்களுடைய ஜீப்பில் ‘சாம்சங் கேலக்சி நோட் 7’ ரக செல்போனை எடுத்துச் சென்றனர். அவர்கள் அந்த செல்போனை ஜீப்பில் இருந்தபடியே ‘சார்ஜ்’ செய்துள்ளனர், அப்போது அந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதுடன் அந்த ஜீப் முழுவதும் தீ பற்றி எரிந்துள்ளது.

 

 

  • இதேபோன்று பல சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, தென் கொரியாவை சேர்ந்த மிகப்பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங், உலகளவில் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 2.5 மில்லியன் போன்களை திரும்பப்பெற்றது. விற்பனையையும் நிறுத்தியது. ஆஸ்திரேலியாவில் சாம்சங் கேலக்சி நோட் 7 ரக போன்களும் திரும்பப் பெறப்பட்டன.

 

 

  • மேலும், சாம்சங்சின் புதுரக போன் வெடிக்கும் அபாயம் உள்ளதாக வந்த தகவலையடுத்து ஆஸ்திரேலியாவில் செயல்பட்டு வரும், குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களில் பயணம் செய்யும்போது சாம்சங் கேலக்சி நோட் 7 போன்களை ஆன் செய்வது மற்றும் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

 

 

  • இதேபோல், விமானங்களில் இந்த ரக செல்போன்களை பயணிகள் எடுத்துச் செல்வதற்கும் பல்வேறு நாடுகளின் சிவில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் தடை விதித்து உள்ளன. இந்நிலையில், இந்தியாவில் இந்த ரக போன்களை பயணிகள் விமானங்களில் பயன்படுத்த தற்போது தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

 

  • இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர், ஒரு அறிவுறுத்தல் குறிப்பை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், ”விமானங்களின் இயக்கம் மற்றும் அவற்றில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, சாம்சங் கேலக்சி நோட் 7 ரக செல்போன்களை பயணிகள் பயன்படுத்துவதையோ, அவற்றை சார்ஜ் செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதேபோல் சரக்கு பகுதிக்கான உடமைகளுக்குள்ளும் இந்த ரக செல்போன்களை பயணிகள் வைக்கவும் கூடாது” என்று கூறப்பட்டு உள்ளது.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.