2006-ல் தினசரி 50 மாவு பாக்கெட்டுகள் விற்பனை செய்த முஸ்தஃபா மல்ட்டி மில்லியனராக சாதித்தது எப்படி?

 

  • கேரளாவைச் சேர்ந்த முஸ்தஃபா. இவரது தந்தை சின்னச் சின்ன நொறுக்குத் தீனிகள் விற்கும் வியாபாரி. அப்போது சிறுவயதில் 5 பைசா, 10 பைசாவுக்கு ஸ்வீட்ஸ்களை விற்று வந்த முஸ்தஃபா இன்ஜினீயரிங் முடித்து யூ.கே உள்பட பல உலக நாடுகளில் வேலை செய்து, பெங்களூரு ஐ.ஐ.எம்-ல் எம்.பி.ஏ முடித்து சிறிய அளவில் தொடங்கிய ஒரு நிறுவனம்தான் ID fresh (idly,dosa). 2006-ல் தினசரி 50 மாவுப் பாக்கெட்டுகள் விற்பனையாகி வந்தது. பிறகு முஸ்தஃபாவின் வளர்ச்சி எல்லாமே ஜெட் வேகம்தான்.

 

 

  • கேரளாவில் தங்களது வீட்டில் இருந்த தங்களது வியாபாரத்தை பெங்களூருவுக்கு மாற்றினார்கள். இதற்கென ஒரு கிச்சன் ஒதுக்கினார்கள் தினசரி விற்றுவந்த 50 மாவுப்பாக்கெட்டுகள் 500 ஆகியது, 500, 5,000 ஆக மாறியது. தற்போது 2016-ல் இந்த 5,000 – ம் 50 ஆயிரமாக மாறியுள்ளது. பெங்களூருவில் இருந்த வியாபாரம் மைசூரு, சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு வியாபாரம் விரிந்தது.

 

 

  • சென்ற ஆண்டு மட்டும் இவரது நிறுவனத்துக்கு ரூ.100 கோடி வருவாய் வந்துள்ளது. இந்த ஆண்டு வருவாய் ரூ.170 கோடியாக எகிறியுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.1,000 கோடி வருவாய் என்பது இவர்கள் டார்கெட்டாம்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.