மருத்துவப் பூங்காவால் 8,000 பேருக்கு வேலைவாய்ப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for If Medicare park for up to 8,000 jobs

 

  • செங்கல்பட்டில் மத்திய அரசால் அமைக்கப்படவிருக்கும் மருத்துவப் பூங்காவால் 8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

  • 330 ஏக்கரில் அமைய உள்ள மருத்துவப் பூங்காவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு தொழிற்சாலை மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ), தனியார் நிறுவனத்தோடு இணைந்து ரூ.135 கோடி செலவில் இந்த தொழிற்சாலையை அமைக்க உள்ளது. இந்த தொழிற்சாலை உருவாவதன் மூலம் 3 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும், 5 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

இது தொடர்பாக மருத்துவப் பூங்கா உயர் அதிகாரிகள் கூறியது:

 

  • 330 ஏக்கரில் மருத்துவப்பூங்கா அமையவுள்ளது. இந்தப் பூங்காவில் மருத்துவ உபகரணத் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை அமையும். இந்தப் பூங்கா உருவாவதன் மூலம் நவீன உயர் மருத்துவக் கருவிகளை குறைந்த செலவில் தயாரிக்க முடியும். இதன் மூலம் குறைவான செலவில் தரமான மருத்துவச் சேவையை மக்களுக்கு அளிக்க முடியும். குறிப்பாக பரிசோதனைக் கருவிகள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தபட உள்ளது. இந்த மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையானது ரூ.3 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும் விதத்தில் அமைய உள்ளது.

 

  • 7 ஆண்டுகள்: இந்த தொழிற்சாலையானது 7 ஆண்டுகளில் பல கட்டங்களாக அமைக்கப்பட உள்ளது. முதற்கட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும். தொழிற்சாலை கட்டுமானப் பணிகளுக்காக 135 ஏக்கர் பரப்பளவுள்ள நிலம், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]