மூன்றெழுத்து மந்திரம் IAS

Image result for மூன்றெழுத்தில் வாழ்க்கை IAS

மூன்றெழுத்தில் வாழ்க்கை IAS

  • இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கும் நீதிபதிகளுக்கும் அடுத்ததாக அதிகார வர்க்கம் என அழைக்கப்படக் கூடியவர்கள் குடிமைப் பணியாளர்கள் , இந்திய அரசியலமைப்புச் சாசனம் கொடுத்துள்ள சில சலுகைகள் அவர்களை நிரந்தர ஆளும் வர்க்கமாக இருப்பதற்கு வாய்ப்பளித்திருக்கிறது, ஆட்சிக் கட்டிலில் அரியனை ஏறுபவர்களுக்கு வழிகாட்டக் கூடியவர்களாகவும் , கொள்கைகளை உருவாக்குபவர்களாகவும் இருப்பவர்கள் இந்த குடிமைப் பணியாளர்கள்.

 

 

  • இந்தக் குடிமைப் பணியாளர்களை தேர்வு செய்வதற்காக ஆண்டுதோறும் தேர்வினை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் . இத்தேர்வைப் பற்றியும் அதன் அமைப்புமுறை பாட்த்திட்டம் , எவ்வாறு படிப்பது , என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும் என்பது போன்றவற்றை பின்னர் எழுதுகிறேன், பொதுவாக இத்தேர்வுக்கு தயாராவோர்க்கு, நம்பிக்கை, ஊக்கம், சிறந்த வழிகாட்டுதல் ஆகியவை தான் தேவை, அதை நானும் எனது நண்பர் குழுவும் இயன்ற அளவுக்கு உங்களுக்கு உதவி புரிகிறோம்.

 

 

                                          ” வினைதிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
                                             மற்றைய எல்லாம் பிற”

 

 

  • இத்தேர்வைப் பொறுத்த வரை உங்களுடைய முதல் வெற்றி உங்களுடைய , இலக்கினை, குறிக்கோளை நேர்மையாகத் தேர்ந்தெடுப்பதில் தான் உள்ளது, இதனைப் பொறுத்தவரை உங்களின் பெற்றோர் அல்லது உறவினர் அல்லது சமூக அழுத்தத்தினாலோ இந்தத் தேர்வை தேர்ந்தெடுக்க கூடாது. உங்களுடைய சுயவிருப்பத்தின் பேரிலும் சொந்த ஈடுபாட்டின் காரணமாகத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

 

  • இத்தேர்வு பட்ட மேற்படிப்புக்காகவும் , இதர வேலைகளை பெறுவதற்காகவும் நடத்தப் படும் நுழைவுத் தேர்வினைப் போன்றது அல்ல என்பதனை புரிந்துகொள்ள வேண்டும், இத்தேர்வானது நேரடியாக மக்களுடனும் மக்கள் பிரதிநிகளுடனும் இனைந்து செயல்படும் தன்மையைக் கொண்டதாக இருக்கும் எனவே இதற்கு ஏற்றால் போல தயார் செய்ய வேண்டும். இந்தத் தேர்வில் உங்களிடம் இருக்கும் அனைத்து திறமைகளையும் எதிர்பார்க்கும் தேர்வு எனவே உங்கள் விருப்பத்தின் பேரில் தயார் செய்தால் மட்டுமே வெற்றிக்கனியை பறிக்க முடியும்.

 

 

                                           ”உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
                                             தள்ளினும் தள்ளாமை நீர்த்து”

 

 

என்று சொன்னார் வள்ளுவப் பெருந்தகை எனவே நீங்கள் சிந்திப்பன எல்லாம் உயர்வுடையனவாகவே இருக்கட்டும்

 

 

  • பொதுவாக பல மாணவர்கள் இத்தேர்விற்கு தயார் செய்வதற்கு தயங்குகின்றீர்கள் ஏனென்றால் நீங்களாகவே இவ்வாறு சிந்தித்துக் கொள்கிறீர்கள், நான் மிகச்சிறந்த தலையாய கல்வி நிறுவனத்தில் (IIT,IIM) கல்வி கற்கவில்லை என்றும் நான் ஆங்கிலத்தில் மிகவும் பின் தங்கியுள்ளேன் என்றும், அரசுப்பள்ளியில் படித்தேன் என்றும் நீங்களாகவே கற்பனை செய்துகொண்டு இத்தேர்வில் நீங்கள் பின் வாங்குகின்றீர்கள், ஆனால் உண்மை அதுவல்ல உங்களுக்கு ஈடுபாடும் , மிகுந்த வேட்கையும் இருந்தால் போதுமானது , மேலே சொன்து போல் பிரபலமான கல்லூரிகளிலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் அறிவும் தேவை இல்லை, கடின உழைப்பும் , உங்கள் பொன்னான நேரத்தையும் முறையாக பயன்படுத்தினால் போதுமானது, பட்டப்படிப்புகளிலும் , பள்ளிக்கூடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றிருக்க தேவையில்லை.

 

 

  • இத்தேர்விற்கு தயராகும் காலம் நமது வாழ்வில் பொற்காலம் போன்றது, தயாரகும் காலகட்டத்தில் சமூகத்தைப் பற்றியும், உங்களைப் பற்றியும், சகமனிதர்களைப் பற்றியும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு அதிகம். ஏனென்றால் நீங்கள் பணியாற்றப் போவது இவர்களோடுதான்இத்தேர்வில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் , நமது குழு வழிகாட்டுதல் , பாட்த்திட்டம் பற்றி விளக்குதல், பாடக்குறிப்புகள்(Study material , Preparation Schedule, Motivation Etc) வழங்குதல், ஊக்கமளித்தல் ஆகியவை 2016 ஆகஸ்ட் மாதம் முதல் நிலைத் தேர்வு வரைத் தொடரும்.

 

 

                                                  ”  உருண்டோடும் நாளில் , கரைந்தோடும் வாழ்வில்
                                                     ஒளிவேண்டுமா? இருள் வேண்டுமா? முடிவு எடுங்கள்”

 

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.