ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்:தமிழக அரசு அறிவிப்பு

Image result for IAS. , May apply to the main test training : Government Notice

 

  • ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு
    முதன்மைத் தேர்வுக்கான மாணவ-மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப்படிவங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. குமாராசாமி ராஜா சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்கள் அளிக்கப்பட உள்ளன.

 

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கப்பட்ட பிறகு, சேர்க்கை நடைபெறும். முதன்மைத் தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மொத்தம் 225 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

 

  • இந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சி மையத்தில் பயின்ற மாணவ-மாணவியர்களும் எந்தப் பயிற்சி மையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

 

  • பயிற்சி வகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் தொடங்கி, முதன்மைத் தேர்வுகள் தொடங்கும் வரை நடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணம் இல்லாத விடுதி வசதி உண்டு. இந்தப் பயிற்சிக் காலத்தில் மாதத்துக்கு ரூ.3 ஆயிரம் உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்படும்.

 

  • மேலும் விவரங்களுக்கு, முதல்வர், அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், சென்னை-28 என்ற முகவரியிலும், 044-24261475 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS LATESTS GOVERNMENT JOBS
No Comments

Sorry, the comment form is closed at this time.