I know about Android

Android பற்றி எனக்கு தெரிந்தவை ?

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

வணக்கம் ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பெரிய பதிவில் சந்திக்கிறோம் ஒவ்வொரு நண்பருக்கும் ஒவ்வொரு கேள்வி?

 

இந்த பக்கம் தொடங்கும் போது எனக்கு வந்த பல குறுஞ்செய்திகளில் இதுதான் அதிகம்

 

 • Android என்றால் என்ன ?

 

 • Android பாதுகாப்பான ஒன்றா ?

 

 • இதில் வைரஸ் பிராபலம் எதாவது உண்டா ?

 

 • ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?

 

 • மேலும் இதுல என்ன வசதிகள் உள்ளன ?

 

 • ரூட் என்றால் என்ன ?அத எதுக்கு பண்ணனும் ?இதுல நன்மை தீமை என்ன ?

 

 • இதுல ஏன் ஜார்ஜ் நிக்கவே மாட்குது ?நம்பலால அத சேமிக்க முடியுமா ?

 

 • Android சிறந்த இயக்கமுறமை தானா ?

 

 • நம்பளால் ஒரு application வடிவமைக்க முடியுமா ?

 

 • இது மூலமா நம்பளால சம்பாரிக்க முடியுமா?

 

 • என பல கேள்விகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன அதுக்கெல்லாம் பதில் வந்திருக்க வாய்ப்பில்லை அதுக்காக என்ன திட்டிருபீங்க பல பேரு உண்மையா சொல்லணும் நா இதற்கான முழுமையான பதில் எனக்கு தெரியாது அதுதான் உண்மை
  இப்ப அதெல்லாம் பத்தி தெரிசுகிட்டு உங்களுக்காக இந்த பதிவு எழுத போறேன் தயவுசெய்து படிக்கறதுக்கு முன்னாடியே பகிர்ந்து கொள்ளுங்கள் அப்புறம் உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை எதாவது டவுட் னா நீங்க என் Page வந்து தொலவிட்டு இருக்கணும் Share பணினா உங்களோட Profile ல இருக்கும் உங்க நன்மைக்குதான் சொன்னேன் சரி விசியத்துக்கு வருவோம் .

 

 • வளர்ந்து வரும் காலகட்டத்தில் Android நமிடையே ஒரு வளர்ச்சியை கண்டு வருகின்றது ஆனால் பலருக்கு இது பற்றி முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை (தெரிஜவங்க பொங்க வேண்டாம் யாருக்கு சொல்லுவேன்னு அவங்களுகி தெரியும்

Android என்றால் என்ன ?

 

 

 • வளர்ந்து வரும் தொழில்நுட்ப கால கட்டத்தில் கணினிக்கு அடுத்த படியாக சக்கைபோடு போட்டுகிட்டு இருக்கும் மொபைல் தொழில்நுட்ப வளர்ச்சியே Android இதனை பற்றி பல பேர் பலவிதமா தெரிஞ்சு வசுருபீங்க இருந்தாலும் இதையும் தெரிந்துகொள்ளுங்கள் .

 

 • நம்ப கணினில பண்ணுற வேலைல்லாம் இப்ப சுலபமாக மொபைல் பண்ணும் தொழிநுட்பம் கிட்டத்தட்ட வந்துவிட்டன அதுமட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் புது புது Application கள் வந்து கொண்டு இருகின்றன உங்களுக்கு தெரியுமா ?

 

 • சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

 • ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.பல பல புது version களில் வெளிவந்து கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறது தற்போது பக்கமா வெளியான கிட்கட் version மக்களிடையே வரவேற்பை பெற்றது

அப்படியே இதையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

Code name Version number Initial release date API level
N/A 1.0 23 September 2008 1
1.1 9 February 2009 2
Cupcake 1.5 27 April 2009 3
Donut 1.6 15 September 2009 4
Eclair 2.0 – 2.1 26 October 2009 5–7
Froyo 2.2 – 2.2.3 20 May 2010 8
Gingerbread 2.3 – 2.3.7 6 December 2010 9–10
Honeycomb 3.0 – 3.2.6 22 February 2011 11–13
Ice Cream Sandwich 4.0 – 4.0.4 18 October 2011 14–15
Jelly Bean 4.1 – 4.3.1 9 July 2012 16–18
KitKat 4.4 – 4.4.4 31 October 2013 19–20
Lollipop 5.0 – 5.1.1 12 November 2014 21–22
Marshmallow 6.0 – 6.0.1 5 October 2015 23
Nougat 7.0 22 August 2016 24
 • ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.உங்களுக்கு தெரியாதா என்ன ?

 

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:

 

 

1. Customize Home Screen – மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படி Widget-களை வைத்துக் கொள்ளலாம்.

 

2. Threaded SMS – நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

 

3. Web Browser – கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

 

4. Google Apps – கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

 

5. Voice Action – இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை.

 

6. ScreenShot – மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

 

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.

 

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

 

 • ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application MARKET உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

 

 • ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

 

Android MARKET:

 

 • ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.இப்ப கூட நம்ப Blackmarket அப்புறம் ladoo போன்ற application பயன்படுத்தி இலவாமாக தரவிறக்கலாம் உங்களுக்கு தெரியாதா என்ன ?

 

 • ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி மேலும் பார்க்கலாம்

 

Android பாதுகாப்பான ஒன்றா ?

 

 •  ஆன்ட்ராய்ட் பற்றிய சிறு அறிமுகத்தை தான் நான் உங்களுக்கு சொணன் மேலும் தகவல் தேவைபட்டால் நீங்க கூகுளில் தேடி பார்க்கவும் . ஆன்ட்ராய்ட் சாதனங்களில் பல்வேறு பிரமிக்கும் வசதிகள் இருந்தாலும் அதிலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை பற்றி இங்கு பார்ப்போம்.

 

Background Applications:(இத மேலேயே சொலிருக்கேன் இங்கயும் அவசியம் )

 

 • நீங்கள் பயன்படுத்தும் அப்ளிகேசன்களை விட்டு வெளியேறினாலும் அவற்றில் சில பின்புலத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும். இது Background Applicationsஆகும். இதனால் உங்கள் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடும். மேலும் உங்கள் மொபைலில் கட்டண இணைய வசதி இருந்தால் இந்த அப்ளிகேசன்கள் இணையத்தை தொடர்பு கொள்வதன் மூலம் உங்கள் பணமும் தீர்ந்துவிடும்.உடனே உங்க Mindvoice இத நீக்க வழி எனக்கு கேட்டுருசி சொல்லுறேன்

 

 

பின்புல அப்ளிகேசன்களை நீக்குவது எப்படி?

 

 • ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Applications => Running Services என்ற பகுதிக்கு சென்றால் பின்புலத்தில் செயல்படும் அனைத்து அப்ளிகேசன்களின் பட்டியலை காட்டும். அதில் தேவையில்லாத அப்ளிகேசன்களை க்ளிக் செய்து, Stop என்பதை க்ளிக் செய்யவும்.

 

 • இயங்குதளம் தொடர்பான சில அப்ளிகேசன்களும் இருக்கும்.

 

 • அதனை நீக்கிவிட வேண்டாம். அப்புறம் அதுக்கு தீர்வ கண்டுபிடிக்க அலையை வேண்டியதுதான்

 

ஆன்ட்ராய்ட் மொபைலில் Settings => Accounts & Sync என்ற பகுதிக்கு சென்றுBackground data traffic என்ற இடத்தில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள். இதனால் எந்த அப்ளிகேசனும் பின்புலத்தில் செயல்படாது. ஆனால் நீங்கள் உலவியில் இணையத்தை பயன்படுத்தலாம்.

 

Google Play (முன்பு Android MARKET) போன்ற சிலவற்றை பயன்படுத்த இந்த தேர்வினை டிக் செய்திருக்க வேண்டும்.

 

ரொம்ப முக்கியமான விசியம் அனைவருகுமே இதில் தான் ஆப்பு ?

 

மொபைல்  இணைய இணைப்பை நிறுத்தி வைக்க:

 

மொபைல் இணைய இணைப்பை பயன்படுத்தாமல் Wi-fi மூலம் மட்டும் இணையத்தை பயன்படுத்துமாறு வைக்கலாம்.

 

Settings => Wireless & Networks => Mobile Networks என்ற பகுதிக்கு சென்று Data enabled என்பதில் டிக் மார்க்கை நீக்கிவிடுங்கள்.

 

ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களால் ஆபத்தா?

 

 • ஆன்ட்ராய்ட் மொபைல்களின் சிறப்புகளில் ஒன்று இதற்கென அதிகமான அப்ளிகேசன்களும், விளையாட்டுக்களும் உள்ளது தான். கடந்த மார்ச் மாதம் வரை நாலரை லட்சத்திற்கும் அதிகமான அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. அவற்றில் அதிகமானவைகள் இலவசமாக கிடைக்கின்றன.இலவசங்கள்  எதுவும் இலவசம் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லா இலவசங்களுக்கும் நாம் மறைமுகமாக ஏதோவொரு விலை கொடுக்கிறோம். இலவச ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களிலும் அப்படித்தான்.

 

 • கடந்த அக்டோபர் 2011-வரை கிட்டத்தட்ட 37 சதவீத அப்ளிகேசன்களை ஆன்ட்ராய்ட் மார்க்கெட்டிலிருந்து (Google Play) பல்வேறு காரணங்களுக்காக கூகுள் நீக்கியுள்ளது. அதில் 70 சதவீதம் இலவச அப்ளிகேசன்களாகும். நீக்கப்பட்டதில் அதிகமானது மால்வேர் அப்ளிகேசன்களாகும்.

 

 • பொதுவாக ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும்போது சில அனுமதிகள் (Permissions) கேட்கும். அவற்றை ஏற்றுக் கொண்டால் தான் அவைகளை நிறுவ முடியும்.

 

நம்ப ஆளுங்க இலவசம் என்றால் விடுவாங்களா அதானே பல பிரச்சனைக்கு வித்து

ஆன்ட்ராய்டில் மொத்தம் 22 விதமான அனுமதிகள் இருக்கின்றன. அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களை நிறுவும் முன் அந்த அனுமதிகளை படிப்பது அவசியமாகும். முக்கியமான சில அனுமதிகள்,

 

 • Services that cost you MONEY – make phone calls [உங்கள் மொபைலில் இருந்து மற்றவர்களுக்கு கால் செய்வதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்

 

 • Services that cost you MONEY – send SMS or MMS [உங்கள் மொபைலில் இருந்து எஸ்.எம்.எஸ், எம்.எஸ்.எஸ் ஆகியவைகளை அனுப்புவதற்கான அனுமதி. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படலாம்.

 

 • Storage – modify/delete SD card contents [உங்கள் மெமரி கார்டில் சேமித்து வைக்கவும், அதில் உள்ளவற்றை மாற்றம் செய்வதற்கு, நீக்குவதற்குமான அனுமதி.

 

 இறைவன் நாடினால் அனைத்து அனுமதிகளைப் பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.

 

அப்ளிகேசன்களை நிறுவும் முன் அவைகள் கேட்கும் அனுமதி அவசியமானதா? என்பதை பாருங்கள். Photography தொடர்பான அப்ளிகேசன் Storage அனுமதியை கேட்கும். ஆனால் அதுவே Phone Call செய்வதற்கான அனுமதியை கேட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

 

சில அப்ளிகேசன்களை நிறுவுவதற்கு எந்த அனுமதியையும் கேட்காது. “This application requires no special permissions to run.” என்று சொல்லும். ஆனால் அது போன்ற அப்ளிகேசன்களாலும் மால்வேர்களை நிறுவி நமது தகவல்களை எடுக்க முடியும் என்று தற்போதைய ஆய்வு தெரிவித்துள்ளது.

 

பாதுகாப்பாக இருப்பது எப்படி?

 

தீங்கு விளைவிக்கும் அப்ளிகேசன்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு சிறந்த வழி, அந்த அப்ளிகேசன்/கேம் பற்றி அதை பயன்படுத்தியவர்கள் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை “User Reviews” பகுதியில் படிப்பதாகும். அதை படித்தல் ஓரளவு நாம் தெரிந்துக் கொள்ளலாம். Rating-ஐ மட்டும் பார்க்க வேண்டாம். கருத்துக்களையும் படியுங்கள்.

 

முடிந்தவரை அப்ளிகேசன்/கேம்களை Google Play-வில் இருந்து மட்டுமே நிறுவுங்கள். தற்போது  போலியான Angry Birds Space கேம் மற்ற தளங்களில் பரவி வருகிறது. இது Trojan Virus-ஐ நிறுவிவிடும்.

 

கவர்ச்சியான, ஆபாசமான அப்ளிகேசன்/கேம்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவைகள் தான் அதிகம் மால்வேர்களை பரப்புகிறது.

 

நீங்கள்  பார்க்கும் அனைத்து அப்ளிகேசன்களையும் நிறுவ வேண்டாம்.

 

இறைவன் நாடினால் ஆன்ட்ராய்ட் பாதுகாப்பு பற்றி மேலும் பார்ப்போம்.

 

ஆன்ட்ராய்ட் பற்றிய அனைத்து பதிவுகளும் இங்கே.

 

ஓட்டபானையில் தண்ணி உதினால் எப்படி நிக்கவே நிக்கதோ அதுபோலதான் இதுவும் கதை யாருசே

 

ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?

 

மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Use) பகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.

 

ரூட் பற்றி எங்கள் பக்கத்தில் முதல் இரண்டு பதிவுகளை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

 

 

பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:

 

 

1. திரை ஒளிர்வு (Brightness)

 

மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

 

Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.

 

2. GPS, Wi-Fi & Bluetooth

 

தேவைப்படாத நேரங்களில் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை நிறுத்திவிடுங்கள். இவைகள் எப்போதும் On செய்திருந்தால் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.

 

Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம். 3. Live Wallpaper

 

ஆண்ட்ராய்ட் மொபைலில் உள்ள வசதிகளில் ஒன்று Live Wallpaper எனப்படும் தொடுவுணர்வு கொண்ட அனிமேசன் புகைப்படங்கள். இந்த வசதியும் பேட்டரியை எடுத்துக் கொள்ளும். விருப்பமிருந்தால் சில நாட்கள் வைத்துக் கொண்டு பிறகு நீக்கிவிடுங்கள்.

 

4. Home Screen Widgets

 

ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.

 

5. Background Applications

 

சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற தொடரில் மேலே  விரிவாக படித்திருப்போம்

 

ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்

 

எதோ எனக்கு தெரிந்ததையும் என்னுடைய நண்பர்களாகிய நீங்கள் எனக்கு சொன்னதையும் வைத்து இந்த பதிவை முடித்துகொள்கிறேன் மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள எங்கள் பக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி  மேலும் வேணும் நா நீங்க

 

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]