ஹாக்கி, டென்னிஸ்.. ஒலிம்பிக்கில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகளை மிஸ் பண்ணிறாதீங்க!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

800x480_IMAGE56389497

 

 

  • ரியோ டி ஜெனிரோ: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை30 மணிக்கு தொடங்கியாச்சு.

 

  • நம்மூர் ரசிகர்களுக்கு நம்ம வீரர்கள் எப்போது, எந்தெந்த போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பதுதானே பெரும் எதிர்பார்ப்பு.

 

  • அதை நீங்கள் அறிந்து கொள்ளவே இந்த தகவல். ஒலிம்பிக்கை நேரடியாக ஒளிபரப்பு செய்யும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நம்ம நாட்டு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நீங்கள் பார்க்க டைம் ஒதுக்கி கொள்ளுங்கள்

 

மாலையில் அதகளம் ஆரம்பம்

 

400x400_MIMAGEfa9d0331467474f5bc27198562013bcb

 

  • இன்று இந்திய வீரர்கள் பங்கேற்கும் போட்டியொன்று தொடங்குவது நமது நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்குதான். ஆடவர்க்கான ஒற்றையர் கை துடுப்பு படகு பந்தையம் அப்போது நடக்கிறது. தத்து போகனால் பங்கேற்கிறார்.

 

டமால், டுமீல்

 

800x480_IMAGE56389497

 

  • 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி, 10 மீட்டர் ஏர் ரைஃபல் துப்பாக்கி சுடும் போட்டிகளும் 5 மணிக்கு நடைபெறுகிறது. ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா சார்பில் ஜிது ராய், குருப்ரீத் சிங் பங்கேற்கிறார்கள். ஏர் ரைஃபல் பிரிவில் அபுர்வி சந்தேலா, அயோனிகா பவுல் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 

 டேபிள் டென்னிஸ்

 

201606021443043304_state-level-table-tennis-tournament-start-on-tomorrow_SECVPF

 

  • மாலை30 மணிக்கு ஆடவர் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் அசந்தா ஷரத் கமல், சவுமியாஜித் கோஷ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் மனிகா பத்ரா மற்றும் மவுமா தாஸும் பங்கேற்கிறார்கள்.

 

ஹாக்கி

 

400x400_MIMAGEf2ae5a95ed83698608feebaf7e359e0d

 

  • இரவு30 மணிக்கு நடைபெறும் ஹாக்கி போட்டியில், அயர்லாந்தை, இந்திய ஹாக்கி அணி எதிர்கொள்கிறது. இழந்த பெருமையை மீட்க இந்திய ஹாக்கி அணி இந்த ஒலிம்பிக் தொடரை பயன்படுத்திக்கொள்ளுமா என்பது அந்த போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

 

 சண்ட போடாம ஆடுங்கப்பு

 

400x400_MIMAGEee6fd3857abdc2293ee71eeca29d28dc

 

  • இரவு 11 மணிக்கு ஆடவர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ரோஹன் போபன்னா ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

 

மகளிர் திலகம்

 

800x480_IMAGE56363728

 

  • மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் பிராதனா தொம்பரேவும் பங்கேற்கிறார்கள். ஆடவரை பார்க்கவா, மகளிர் டென்னிசை பார்க்கவா என்ற டெலிகேட் பொஷிஷனில் இருக்கும் இந்திய ரசிகர்களே ரெண்டு சேனலையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொள்ளுங்கள்.

 

 வெயிட்டான ஆளுங்கப்பு

 

400x400_MIMAGE8f3bfee17b0051d1fe55de5fec044ac0

 

  • ஆகஸ்ட் 7ம் தேதி, நாளை அதிகாலை, 3.30 மணிக்கு நடைபெறும், 48 கிலோ பிரிவு, பளு தூக்குதல் போட்டியில் சாய்கோம் மிராபி சானு பங்கேற்கிறார். வெற்றியோ, தோல்வியோ, அது இரண்டாவது பட்சம். இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் அத்தனை நிகழ்வுகளையும் காணத்தவறாதீர்கள்.